தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) இன்று சென்னை சைதாப்பேட்டை பகுதியில் மேற்கொண்ட பிரசாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Ma. Subramanian0 அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மக்களுடன் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். வழக்கமான கூட்டப் பிரசாரங்களைத் தவிர்த்து, மக்களிடம் நெருக்கமாகச் செல்லும் முயற்சியாக அவர் எடுத்த நடவடிக்கைகள் பேசுபொருளாக அமைந்தன.
பிரசாரத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் சாலையோர கடையில் கரும்பு ஜூஸ் தயாரித்து பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டார். அதன்பின், அருகிலுள்ள பகுதிகளில் ஆட்டோவில் பயணம் செய்து வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த எளிமையான அணுகுமுறை, அங்கிருந்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தலுக்கு இன்னும் 3 நாள்தான் இருக்கு! விட்ராதீங்க!! திமுக பாக முகவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்!
சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை!
சோழிங்கநல்லூர் - வேளச்சேரி - சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும் 🖤♥️#ChennaiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக! pic.twitter.com/Cl7tgrRA8E
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 21, 2026
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் இறுதி கட்ட பிரசாரத்தில் முழு வேகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாக்கையும் பெறும் நோக்கில், நேரடி சந்திப்புகள், வீதி சுற்றுப்பயணங்கள், சிறிய கூட்டங்கள் போன்ற பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் எந்த திசையில் செல்லும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட இந்த வகை பிரசாரம், தேர்தல் களத்தில் கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!