• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்தியாவுக்கே நீங்கள் மட்டும்தான் அத்தாரிட்டியா..? அநியாயத்திற்கு துணை போகும் ஸ்டாலின்..! கடுகடுக்கும் கே.எஸ்.ஆர்

    தேச விரோதிகள் இந்தச் சொத்துக்களை அபகரித்து அதில் கட்டடங்களைக் கட்டி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகக் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை தவறு என்று சொன்னால் நீங்கள் பொது வாழ்க்கைக்கு லாயக்கில்லை என்று தான் அர்த்தம்!
    Author By Thiraviaraj Fri, 04 Apr 2025 14:20:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin will support injustice..! K.S.Radhakrishnan is furious

    நேற்று சட்டமன்றத்தில் வஃக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்குத் தொடர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன.

    இதுகுறித்து அவர், ''அண்ணாவின் காலத்தில்  அன்றைக்குத் தேவையான இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மாநில சுயாட்சிக் கோரிக்கைகள் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது திராவிட நாடு என்றெல்லாம் பேசிய தொனியிலேயே இன்றைக்கும் நீங்கள் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல்  அதையே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! இதற்கிடையில் அந்த அண்ணா குடும்பத்தையும் மறந்து விட்டீர்கள். உங்கள் குடும்பத்தை மட்டும் அரசு பதவிகளில் நிலைநாட்டிக் கொண்டு விட்டு மீண்டும் பழையபடி அண்ணாவின் பேச்சையே துவக்கி துவக்கிப் பேசுகிறீர்கள்.

    K.S.Radhakrishnan

    இன்றைக்கு உலகமயம் தாராளமயம் என்றெல்லாம் உருவாகிவிட்டது. நீங்களும் துபாய், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குச் சென்று அந்நிய முதலீடுகளைத் தமிழ்நாட்டுக்கு என்று கொண்டு வருகிறீர்கள். அதனால், தமிழகம் என்ன பயன் பெற்றது என தெரியவில்லை இன்று வரை. இது வேறு விடயம். இருக்கட்டும். இதையெல்லாம் அண்ணாகாலத்தில் ஒரு செயலாக்கமாக கூடப் பார்க்க முடியாது.

    இதையும் படிங்க: ஹீரோ ஒர்ஷிப்... சாப்பாட்டு மெனுவை விளம்பரம் செய்து அசிங்கம்: இதுதான் பொதுக்குழுவின் லட்சணமா..?

    இவ்வளவு உலகமயமாக்களுக்கு பிறகு பன்னாட்டு மூலதனமா? அதுவும் வேண்டும். அண்ணா சொன்ன இதுவும் வேண்டும் என்று இந்தித்திணிப்பு... இந்தி திணிப்பு  என்று எதையும் திணிக்காத ஒன்றைச் சொல்லிச் சொல்லியே பழைய குருடி கதவைத் திறடி என்கிற கதையாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்தையும் உங்களது சுயநலமாக மாற்றிக் கொண்டு மேலும் கீழும் ஆடியபாதமாக இருக்கிறீர்கள். இன்னும் முறையான அறிவிப்பு வராத சூழ்நிலையில் தொகுதி மறு சீரமைப்பு பற்றி எதிர்ப்புத் தெரிவிப்பதாக மக்களிடம் பிரச்சாரம் செய்கிறீர்கள்.

    K.S.Radhakrishnan

    நேற்று நாடாளுமன்றத்தில் வஃக்பு போர்டு மசோதா நிறைவேறி உள்ளது. சட்டமாகும். உண்மையில் வஃக்பு வாரியத்தில் என்ன சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்குச் சொந்தமான இந்த இடங்கள் உண்மையில்  வறுமையில் வாடும் ஏழை முஸ்லிம்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதைத்தானே நோக்கமாகச் சொல்கிறார்கள். அதைவிடுத்து  அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது பிற மதத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் இந்த வஃக்பு போர்டு சொத்துக்களை அபகரிக்கிறார்கள் என்றெல்லாம் இருக்கிறதே அதை முதல்வர் அவர்களே. நீங்கள் அனுமதிக்கிறீர்களா?

    K.S.Radhakrishnan

    அதேபோல் அதன் சட்டத்தில் அடுத்த மதத்துக்கார்கள் இந்தச்சொத்துக்களை வாங்கக் கூடாது...  முடியாது என்ற ஷரத்தும் இருக்கிறதே. இதில் என்ன தவறு இருக்கிறது? ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முஸ்லிமாக இருந்தால் அவர் தனது சொத்துக்களை வஃக்பு வாரியத்திற்கு தானமாக வழங்கலாம். அதேபோல் ஷன்னி- ஷியா அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக வஃக்பு வாரியம் இருக்கும். அதன் மத்திய கவுன்சிலின்படி 22 பேர் முஸ்லிம்களாகவும் அதற்குள் நான்கு பேர்தான் பிற எந்த மதத்தை சார்ந்த மூன்று  பார்லிமென்ட் உறுப்பினர்களும் இருப்பார்கள். அதில் இரண்டு பெண்களும் உறுப்பினர்களும் இருப்பார்கள். 

    மேற்ச்சொன்ன  வஃக்பு வாரியத்தின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் குறிப்பாக ஏழைகள்தான் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற சரியான காரணங்களோடுதானே இந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் மேற்க்கொள்ளப்படுகிறது.

    K.S.Radhakrishnan

    பார்க்கப் போனால் தேச விரோதிகள் இந்தச் சொத்துக்களை அபகரித்து அதில் கட்டடங்களைக் கட்டி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகக் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை தவறு என்று சொன்னால் நீங்கள் பொது வாழ்க்கைக்கு லாயக்கில்லை என்று தான் அர்த்தம்! இல்லை உங்களை அறியாமலே மேற்சொன்ன அநியாயத்திற்குத் துணை போகிறீர்களா? நூற்றாண்டு காலங்களாக வஃக்பு போர்டு சொத்துக்களைப் பிற மதத்துக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு அதில் கொழித்துக் கொண்டிருப்பது எல்லாம் நியாயம் என்று சொல்கிறீர்களா?

    குறிப்பாக வஃக்பு போர்டு சொத்துக்கள் சிறுபான்மை மக்களான ஏழை எளியவர்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும். அதுதானே  சட்ட திருத்தத்தின் நோக்கம். அதை விடுத்து மதவாதம்... மதவாதம் வந்துவிடும்... என்றெல்லாம் சொன்னால் இங்கு எங்கே மதவாதம் இருக்கிறது? இந்தியாவில் உள்ளவர்கள் எல்லாம் இந்து மதத்தில் சேருங்கள் என்று வற்புறுத்துகிறார்களா? இல்லை அதைத் திணிக்கிறார்களா?

    K.S.Radhakrishnan

    இந்தியாவில் கிறிஸ்துவராக இருப்பவர்கள் சர்ச்சில் மணியோசையோடு ஜெபங்கள் நடத்துகிறார்கள். இஸ்லாமியர்கள் மசூதிகளில் பாங்கோசையோடு தொழுகை நடத்துகிறார்கள். இந்துக்கள் ஆலயங்களில் வழிபாடு நடத்துகிறார்கள். சீக்கியர்கள் தங்களது பொற்கோவிலில் கிரந்தம் வாசிக்கிறார்கள். பௌத்தர்கள் மடாலயங்களில் தியானம் செய்கிறார்கள். அவரவர் உரிமைகளில் யாருக்கு என்ன தடை இருக்கிறது? இதன் பெயர்தானே மதநல்லிணக்கம். இத்தனை மதங்கள் தங்களது வழிபாட்டு உரிமைகளோடும் அதன் நம்பிக்கைகளோடும் வாழும்போது மதச்சார்பற்ற நாடு என்று சொல்வது தவறு தானே. மத நல்லிணக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.  

    இதன் அடிப்படையில் பேசாமல் சுற்றி உள்ள ஆட்கள் எழுதிக் கொடுப்பதைப் பேசுவது அல்லது எழுதிக் கொடுக்கும் அவர்களுக்குத்தான் இதெல்லாம் தெரியாதா? எதிர்ப்பு அரசியல் என்பது அறிவும், ஆற்றலும் உடையதாக இருக்க வேண்டும். எகத்தாளமாக  நேர்மறையாக இருக்க கூடாது.

    K.S.Radhakrishnan

    50, 60 ஆம் வருடங்களில் நடந்த பழைய பஞ்சாங்கங்களையே நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் இன்றைய கால மாற்றங்களை கவனிக்க தவறுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். இன்றைக்கு நீங்கள் சூட் கோட் போட்டு கொண்டு வெளிநாடுகள் எல்லாம் சென்று முதலீடுகளுக்காக அலைகிறீர்களே. இதெல்லாம் 50, 60களில் நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா? மாற்றங்கள் குறித்து எல்லோரும்தான் சிந்திப்பார்கள். 

    இந்தியக் கான்ஸ்டியூசன் பிரச்சனைகள் இந்த மாபெரும் தேசத்தில் கவனமாகத்தான் பரிசீலிக்கப்படுகின்றன.தாங்கள்தான் அதற்கெல்லாம் அத்தாரிட்டி என்பது மாதிரி நடந்து கொள்ளாமல், மாறும் நிலவரங்களோடு சேர்ந்து யோசியுங்கள். வெறும் தேர்தல் கால முரண்பாடுகளை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்த வேண்டாம். உலகமே குளோபல் வீடாகி விட்டது. புதிய தலைமுறைகள் வந்திருக்கிறார்கள். பழைய பஞ்சாங்கங்களை விட்டு நன்மைகளுக்கான வழிமுறைகளை யோசியுங்கள்.

    K.S.Radhakrishnan

    மிகவும் எதிர்பார்க்கப் பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை முன் வந்துள்ள மத்திய அரசு நடவடிக்கையை கேரள சர்ச்சுகள் கூட்டமைப்பு ஆதரிக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வக்பு சட்டம் அடிப்படை இயற்கை நீதிக்கும் அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள சிறந்த விழுமியங்களுக்கும் எதிரானதாக இருந்தது.

    நாட்டின் மதசார்பின்மைக்கு எதிராக இருந்த இச்சட்டத்தின் பிரிவு 40 மற்றும் பிரிவு 108 A ஆகிய மனிதத்தன்மையற்ற பிரிவுகளை நீக்க தற்போதைய மத்திய அரசு முன்வந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. கண்ணீர் வடிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் துயர் துடைக்கும் வகையில் இச்சட்ட திருத்த மசோதாவை இயன்ற அளவிற்கு விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

    சட்டத்திருத்தம் மட்டுமே தங்கள் வாழ்விட உரிமை கேள்விக்குறியாகி கண்ணீர் வடிக்கும்  மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த வக்பு  சட்ட திருத்த மசோதாவை  ஏகமனதாக நிறைவேற்றும் வகையில் அனைத்து கட்சி எம்பிக்களும் இதனை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் நிர்வாகத்தின் கள்ள ஒப்பந்தம்… ரூ.50000 கோடி மோசடி..? ED ரெய்டின் பகீர் பின்னணி..!

    மேலும் படிங்க
    கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி

    கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி

    தமிழ்நாடு
    செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! பெருமைமிக்க தருணம்... முதல்வர் பெருமிதம்

    செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! பெருமைமிக்க தருணம்... முதல்வர் பெருமிதம்

    தமிழ்நாடு
    Blue Tick ரேட்டை குறைத்த எலான் மஸ்க்.. இந்தியர்களுக்கான X சந்தா கட்டணம் தடாலடி குறைப்பு!!

    Blue Tick ரேட்டை குறைத்த எலான் மஸ்க்.. இந்தியர்களுக்கான X சந்தா கட்டணம் தடாலடி குறைப்பு!!

    உலகம்
    சன் பாத் எடுக்குறப்போ சோலியை முடிச்சிருவோம்! ட்ரம்பை பகீரங்கமாக மிரட்டிய ஈரான்..

    சன் பாத் எடுக்குறப்போ சோலியை முடிச்சிருவோம்! ட்ரம்பை பகீரங்கமாக மிரட்டிய ஈரான்..

    உலகம்
    நகைக்காக மூதாட்டி துடிக்க துடிக்க கழுத்தறுத்துக் கொலை! திருச்சியில் ஓர் கொடூர சம்பவம்...

    நகைக்காக மூதாட்டி துடிக்க துடிக்க கழுத்தறுத்துக் கொலை! திருச்சியில் ஓர் கொடூர சம்பவம்...

    தமிழ்நாடு
    ஆந்திராவில் கொலை... கூவத்தில் சடலம்! சித்திரவதை செய்தோம் என கைதானவர்கள் பகீர் வாக்குமூலம்

    ஆந்திராவில் கொலை... கூவத்தில் சடலம்! சித்திரவதை செய்தோம் என கைதானவர்கள் பகீர் வாக்குமூலம்

    தமிழ்நாடு

    செய்திகள்

    கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி

    கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி

    தமிழ்நாடு
    Blue Tick ரேட்டை குறைத்த எலான் மஸ்க்.. இந்தியர்களுக்கான X சந்தா கட்டணம் தடாலடி குறைப்பு!!

    Blue Tick ரேட்டை குறைத்த எலான் மஸ்க்.. இந்தியர்களுக்கான X சந்தா கட்டணம் தடாலடி குறைப்பு!!

    உலகம்
    சன் பாத் எடுக்குறப்போ சோலியை முடிச்சிருவோம்! ட்ரம்பை பகீரங்கமாக மிரட்டிய ஈரான்..

    சன் பாத் எடுக்குறப்போ சோலியை முடிச்சிருவோம்! ட்ரம்பை பகீரங்கமாக மிரட்டிய ஈரான்..

    உலகம்
    நகைக்காக மூதாட்டி துடிக்க துடிக்க கழுத்தறுத்துக் கொலை! திருச்சியில் ஓர் கொடூர சம்பவம்...

    நகைக்காக மூதாட்டி துடிக்க துடிக்க கழுத்தறுத்துக் கொலை! திருச்சியில் ஓர் கொடூர சம்பவம்...

    தமிழ்நாடு
    ஆந்திராவில் கொலை... கூவத்தில் சடலம்! சித்திரவதை செய்தோம் என கைதானவர்கள் பகீர் வாக்குமூலம்

    ஆந்திராவில் கொலை... கூவத்தில் சடலம்! சித்திரவதை செய்தோம் என கைதானவர்கள் பகீர் வாக்குமூலம்

    தமிழ்நாடு
    ஆமதாபாத் விமான விபத்து..  எஞ்சின் நின்றது எப்படி? 2018-லேயே எச்சரித்த அமெரிக்கா!

    ஆமதாபாத் விமான விபத்து.. எஞ்சின் நின்றது எப்படி? 2018-லேயே எச்சரித்த அமெரிக்கா!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share