புதுச்சேரியில் பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மாநில அந்தஸ்து பரிசீலனை செய்து உரிய காலக்கெடுக்குள் உரிய முடிவு மத்திய அரசு எடுக்கப்படும்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் மீண்டும் புதுவை மாநிலத்தில் இன்றைக்கு உருவாவதற்கு மக்கள் பெருத்த ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
மேலும் பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு என்பது மிகப் பிரகாசமாக இருப்பதாகவும், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறு..!! புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை ரிலீஸ்..!!
காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டிலேயே அடித்துக் கொண்டு இருப்பவர்கள், நாளை ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ் கூட்டணியில் உடன்பாடு இல்லை, ஒத்த கருத்து இல்லாத கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து பால் பட்டு போகக்கூடிய சூழல் உள்ளது. இதனை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் 2016 முதல் 2021 வரை ஆட்சி எப்படி நடந்தது என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் . எனவே காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என தெரிவித்த அவர், மாநில அந்தஸ்து குறித்து முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதை பரிசளித்து உரிய காலக்கெடுவுக்குள் உரிய முடிவு மத்திய அரசு எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: அதிரடி சோதனை... !! - நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட முதலமைச்சர் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு...!