பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசியல் கூட்டணி மற்றும் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் குறித்து அதிரடியான கருத்துகளைப் பதிவு செய்தார். வழுவில்லாத கூட்டணியா? வழுவான கூட்டணியா? என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
யாரெல்லாம் தி.மு.க.வைத் தோற்கடிக்க முடியும் என மக்களுக்குத் தெரியும். என்றும், 'திராவிட மாடல் ஆட்சியை ஏமாற்றும் கட்சியை அனுப்ப மக்கள் ஆதரவு உள்ள கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணிதான்' என்றும் வானதி சீனிவாசன் உறுதிபடக் கூறினார்.
திமுக ஓட்டே திமுகவுக்குக் கிடைக்காது, அவர்களே எப்போது இந்த ஆட்சி முடியும் என கட்சியிலும், ஆட்சியிலும் ஏமாற்றமாக உள்ளனர் என்றும், தி.மு.க. வாக்குகள் உடையும்' என்றும் அவர் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதல் முறை! உள்ளாட்சி அமைப்புகளில் 9,000 மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்! - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் பெரிய கட்சிகள் அல்ல என்று கூறிய அவர், மூன்றாவது அணிக்கென வாக்கு சதவீதம் இருக்கும், ஆனால் வெற்றி பெறும் அளவிற்கு இருக்காது என்று கூறினார்.

இன்னும் ஒரு மாத காலத்தில் தமிழகத்தில் வலுவான கூட்டணி உருவாகும் என்றும், நாங்கள் தான் பலமாக உள்ளோம் என்றும் பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்.
திருப்புறகுன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்துக்களின் கனவு என்றும், இதில் நீதிமன்றத் தீர்ப்பு இருந்தும் தி.மு.க. அதை இரண்டாம் பட்சமாகப் பார்க்கிறது என்றும், சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாவலர்கள் போன்று வேஷம் போடும் தி.மு.க. மீண்டும் ஒரு சிக்கலை உருவாக்க முயற்சிப்பதாகவும் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
விஜய், அமித் ஷாவைச் சந்திப்பாரா? என்ற கேள்விக்கு, யாரை யார், எப்போது பார்க்க வேண்டும் என்பதை டெல்லி காரங்க சரியாகச் செய்வார்கள் என்று சூசகமாகப் பதிலளித்தார்.
தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ₹2.46 கோடி மதிப்பீட்டில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டி வருவதாகவும், பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
SIR பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என ஆன்லைனில் ஒருமுறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பா.ஜ.க.வின் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும், வரும் 7 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கூட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

என்னை எதிர்த்துப் போட்டியிட்ட கமல் கட்சி இப்போது எங்கு உள்ளது? தி.மு.க.வில் உள்ளது. அதேபோன்று என்னை எதிர்த்து விஜய் கட்சி போட்டியிட்டால் அவர்கள் எங்கு இருப்பார்கள் என அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கின்றேன் என்று கூறி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் சூசகமாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: மக்களின் துயரத்திற்கு தமிழக அரசு தான் காரணம்! வடிகால் பணிகள் முழுமையடையாதது ஏன்? தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்வி!