பெங்களூரு: கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்ற டி.கே. சிவகுமாரின் செயலாளராக மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தமிழக அரசியல் மற்றும் அதிகார வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜூன் 3-ம் தேதி கர்நாடக முதல்வராக முறைப்படி பதவியேற்ற டி.கே. சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வரா உள்ளிட்ட 12 அமைச்சர்களுடன் அமைச்சரவையை அமைத்தார். பதவியேற்ற உடனேயே மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடங்கியது. அதில் முக்கியமாக, முதல்வரின் செயலாளராக ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜேந்திர சோழன் 2008-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சைச் சேர்ந்தவர். டி.கே. சிவகுமார் கர்நாடக துணை முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
இதையும் படிங்க: கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் விஜய்க்கு 3வது இடம்! முதலிடம் யார் தெரியுமா? சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?

தற்போது முதல்வராக சிவகுமார் பொறுப்பேற்றுள்ளதால், மீண்டும் அவரது நம்பிக்கைக்குரிய செயலாளராக ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கர்நாடக மின்கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளராக துஷார் கிரிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய முதல்வரின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திர சோழனின் நியமனம் கர்நாடக அரசின் நிர்வாகத்தில் தமிழர்களின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.கே. சிவகுமார் பதவியேற்ற பிறகு பல்வேறு துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த நியமனம் முதல் கட்ட அதிகாரிகள் மாற்றத்தின் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. ராஜேந்திர சோழன் தனது நீண்டகால அனுபவத்தைப் பயன்படுத்தி முதல்வரின் அன்றாட நிர்வாகப் பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: கர்நாடக முதல்வர் சிவக்குமார்! துணை முதல்வர் பரமேஸ்வரா!! போட்டோ போட்டு அறிவித்தார் சித்தராமையா!