சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தமிழக அரசு சமீபத்தில் யாருமே எதிர்பாராத சம்பவத்தை செய்திருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்ததுடன், அதிரடியாக 5,000 ரூபாய் தொகுப்பை ஒரே நாளில் பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவித்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்த சூழலில் தான் நாளைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தாக்கல்செய்ய முடியும். பின்னர், ஆட்சிஅமைக்கும் கட்சி பட்ஜெட்டைதாக்கல் செய்யும்இதுதொடர்பாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, வரும் 17ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக சட்டமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அடுத்த கூட்டத்தொடர் கூடுகிறது. அன்றைய தினம் 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் எனக்கூறியிருந்தார். 20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது தமிழக சட்டசபை..!! உரை நிகழ்த்துவாரா ஆளுநர்..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!
பிப்ரவரி 20ம் தேதி வரை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால், சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் திமுகவில் இருந்து கைநழுவக்கூடும் என சில கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் சிறுபான்மையினரையும், இளைஞர்களையும் கவரக்கூடிய அறிவிப்புகளை இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே அதிர்ச்சி... நடுக்கடலில் 25 மீனவர்கள் சுற்றி வளைத்து கைது... இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்...!