பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பு (U-shaped seating arrangement) என்பது மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான வகுப்பறை அமைப்பு முறையாகும். இது மாணவர்களுக்கு இடையேயான தொடர்பு, ஆசிரியருடனான ஈடுபாடு மற்றும் கூட்டு கற்றலை ஊக்குவிக்க உதவுகிறது.

"ப" வடிவத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் ஒருவரையொருவர் எளிதாகப் பார்க்க முடியும், இது விவாதங்களையும் குழு உரையாடல்களையும் எளிதாக்குகிறது. ஆசிரியர் மாணவர்களின் முகபாவனைகளை எளிதாகக் கவனிக்க முடியும், இது கற்றல் செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஆசிரியர் "ப" வடிவத்தின் மையத்தில் நின்று கற்பிக்கும்போது, அனைத்து மாணவர்களுடனும் நேரடி கண்ணோட்டத் தொடர்பு ஏற்படுத்த முடியும். இது மாணவர்களின் கவனத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: துளிக்கூட மக்கள் மேல அக்கறையே இல்லை.. திமுக அரசை கடுமையாக சாடிய தமிழிசை..!
இதெல்லாம் நன்மையாக பார்க்கப்பட்டாலும், இதில் சில சவால்களும் உள்ளன. பெரிய வகுப்பறைகளில் அல்லது அதிக மாணவர்கள் உள்ள இடங்களில் இந்த அமைப்பை அமைப்பது கடினமாக இருக்கலாம். மேலும் மாணவர்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டு உட்கார்ந்திருப்பதால், சில சமயங்களில் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், சில மாணவர்கள் இந்த அமைப்பில் தங்களை வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டலாம், ஏனெனில் அனைவரும் அவர்களைப் பார்க்க முடியும்.
இந்நிலையில் இந்த "ப" வடிவ இருக்கை அமைப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பை அமல்படுத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, இதை முதலில் சரி செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் எங்கேயோ பார்த்து "ப" வடிவ இருக்கை அமைப்பதுதான் எங்கள் முன்னுரிமை என்று இல்லாமல் எப்பொழுதும் இருக்கையை பற்றியே பேசி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி அமைச்சராக மட்டுமே இல்லாமல் மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது என்பது வேதனையளிக்கிறது என்றும் மாணவர்களை வகுப்பறையில் "ப" வடிவில் அமர வைக்கும் பொழுது மருத்துவ ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளை மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். தொடர்ந்து கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை, கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் என்ற முறையிலே அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கேரளா சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பது விட்டு விட்டு அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பையும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமனப்படுத்த வேண்டும் என்று போராடும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளையும் முன்னுரிமை கொடுப்பதை விடுத்துவிட்டு பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பசங்களா..!! 3 டைம் பெல் அடிக்கும்போது தண்ணி குடிக்கணும்.. அமலுக்கு வந்தாச்சு வாட்டர் பெல் திட்டம்..!