• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    யாரும் தப்பிக்கக்கூடாது... சி.எம். விஜய்யை அலர்ட் செய்த திருமா... தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில் எச்சரிக்கை...!

    தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
    Author By Amaravathi Fri, 25 Sep 2026 09:04:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan warning to cm vijay

    ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் உள்ள மற்ற இரண்டு ஆணையர்களும் எதிர்ப்புகளை பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் கூறிய திருமாவளவன், அதனை மீறி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

    தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகத் தெரியவருவதாக குற்றம்சாட்டிய அவர், அவர் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடு என்றார்.

    எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளால் வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் தாக்கம் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டம் பாப்பேரி கிராமத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும், இதனைத் தட்டிக்கேட்ட மாணவியின் உடன்பிறந்த அண்ணன் தாக்கப்பட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளதாக கூறிய அவர், இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளரிடம் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் கிராமத்தில் விநாயகர் சிலையை எடுத்துச் சென்றபோது தட்டிக்கேட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் தாக்கப்பட்டதாகவும், சாதி ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

    இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது எனக் கூறிய அவர், தலித் மக்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என்றார்.

    இதுதொடர்பாக முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாகவும், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    நத்தம் அருகே தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறிய திருமாவளவன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம் அருகே இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினர் விசாரணை நடத்திவிட்டு அதனை தற்செயலான விபத்து என நியாயப்படுத்துவது அதிர்ச்சியளிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    இரு தொகுதிகளிலும் மதச்சார்பற்ற சமூகநீதிக் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இரு தொகுதிகளிலும் தங்களது கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வருவதாகவும், வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக தெரிவித்த திருமாவளவன், தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    ஜெம் கிரானைட் உரிமையாளர் கைது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசு இந்த வழக்கில் கவனத்துடன் புலனாய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். குற்றத்தில் தொடர்புடைய யாரும் தப்பிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    ஊழல், லஞ்சத்தை ஒழிக்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்

    ஊழல் மற்றும் லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்பதே அரசின் நோக்கம் எனக் கூறிய திருமாவளவன், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

    அதிகாரிகளுக்கு இடையூறுகள் இருந்தாலும், அரசு அதிகாரிகள் ஒத்துழைத்தால்தான் அரசின் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share