• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சட்டமன்றத்தில் வார்த்தையை விட்ட புஸ்ஸி ஆனந்த்... தூத்துக்குடி தவெக முன்னாள் பெண் நிர்வாகி பாலியல் வழக்கில் திடுக் திருப்பம்...!

     இதற்கெல்லாம் புலன் விசாரணை மூலம் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
    Author By Amaravathi Sat, 05 Sep 2026 11:41:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thoothukudi MLA Saravanan sexual harassment complaint

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த தவெக பெண் நிர்வாகி  கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது தவறு இல்லை என புலன் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் புஷ்ஸி ஆனந்த் சட்டமன்றத்தில் பேசிய நிலையில் தான் கொடுத்த புகார் மனு மீது எந்த புலன் விசாரணையும் தன்னிடம் செய்யவில்லை என்ற போது எந்த அடிப்படையில் அவர் மீது தவறில்லை என கூறுகிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சட்டமன்ற கூட்டத்தில் கடந்த மூன்றாம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டி பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் மான புஸ்ஸி ஆனந்த், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது எந்த தவறும் இல்லை என புலன் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தெரிவித்தார். 

    தான் கொடுத்த புகார் மனு மீது எந்த புலன் விசாரணையும் தன்னிடம் செய்யவில்லை என்ற போது எந்த அடிப்படையில் அவர் மீது தவறில்லை என கூறுகிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: “போராட்டம் வெடிக்கும்” ... தவெக அரசை எச்சரித்த வீரபாண்டியன்... அதே மேடையில் பதிலடி கொடுத்த அமைச்சர் ஆனந்த்...!

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணான இசக்கி அம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 3ஆம் தேதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூட்டு பாலியல் வன் கொடுமை குறித்து விவாதம் செய்தார்கள். அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்திருந்தார்.   நான் மே 31ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் புகார் அளித்திருந்தேன்.  ஜூன் ஒன்றாம் தேதி குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டாம் தேதி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினர் எனவும் பாதிக்கப்பட்ட என்னை தூத்துக்குடி பெண் எனவும் நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். நான் கட்சியில் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராக பதவியில் உள்ளேன். 160 ரூபாய் எனது சொந்த பணத்தை கட்டி பதவியில் உள்ளேன். பிறகு எப்படி தூத்துக்குடி பெண் என சொன்னார் என தெரியவில்லை. அவர் ஒருதலைபட்சமாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரை காப்பாற்றும் விதமாகவே பேசுகிறார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஒரு தவறும் செய்யவில்லை என அவர் தெரிவிக்கிறார்.

    யாரை வைத்து புலன் விசாரணை செய்தீர்கள் என தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்விக்கு பதில் அளித்தீர்கள் பாதிக்கப்பட்ட எனக்கு பதில் சொல்லுங்கள். முதல் தகவல் அறிக்கையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்  பெயர் கிடையாது.  சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவரது பெயரை ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சேர்க்கவில்லை.  அவரது ஆதரவாளர்கள் என்னை மிகவும் கொச்சைப்படுத்தினார்கள். அவரது ஆதரவாளர்கள் இரு தினங்களாக வதந்திக்கு முற்றுப்புள்ளி என கூறி வருகின்றனர். நான் பாதிக்கப்பட்டது உண்மை. இதற்கு உடந்தையாக இருந்தது சட்டமன்ற உறுப்பினர் தான்.

    குற்றம் செய்த இருவரையும் கைது செய்து தண்டனை கொடுத்து விட்டீர்கள். இதுக்கு உடந்தையாக இருந்த சட்டமன்ற உறுப்பினரை என்ன செய்தீர்கள். எம்எல்ஏ ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்ட எனது புகைப்படத்தை வெளியிட்டனர். தலைவர் முதல்வராக வெற்றி பெற்றதும் நான் ஆடியதை வெளியிட்டனர். எம்.எல்.ஏ உடன் நான் பேசியதை வெளியிட்டனர்.  இதற்கெல்லாம் புலன் விசாரணை மூலம் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன். திருநெல்வேலி மாவட்ட காவல் தலைவரிடம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பெயரை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளேன்.

    தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளேன். மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் வாக்குமூலம் கேட்கும் போதும் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி சரவணன் குற்றவாளி என சேர்த்துள்ளேன். அப்படி இருக்கும் போது அவர் குற்றவாளி அல்ல என யார் புலன் விசாரணையில் கூறியது என அறிய விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட பெண் நான் கேட்கிறேன் எனக்கு பதில் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது முறையாக எனக்காக சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

    அவரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். திங்கள் கிழமை நடைபெறும் சட்டமன்றத்திலும் எனக்காக சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் கேட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் விஜய் இந்த வழக்கை நேரடியாக பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். புகார் மனு கொடுத்த என்னிடம் எந்த புலன் விசாரணையும் செய்யாமல் எப்படி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நிரபராதி என சொல்கிறார்கள் என தெரியவில்லை.

    கட்சியில் பெண்களுக்கு தான் மதிப்பு என கூறுகிறார்கள். எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கூறிய கருத்திற்கு எதிராக அவரை கைது செய்தனர். ஆனால் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் நெஞ்சில் குடியிருக்கும் என தலைவர் விஜய் கூறுகிறார். அவரது நெஞ்சில் நானும் குடியிருக்கிறேன் என நினைக்கிறேன். எனக்கு அவர் நல்லை தீர்ப்பை தருவார். சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    மேலும், சட்டமன்றத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், பாதிக்கப்பட்ட பெண் என பொதுவாக கூறினார். இதுகுறித்து இசக்கியம்மாள், தான் சட்டமன்ற தேர்தலின் போது  புஸ்ஸி ஆனந்த் ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிட வேண்டும் என கூறி  அவரது பெயரில் கட்சி அலுவலகத்தில் பணம் கட்டியதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.

    இதையும் படிங்க: கே.என்.நேரு விவகாரம்... இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கம்... ஸ்டாலின் எதிர்ப்பு..!

    மேலும் படிங்க
    மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

    மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

    இந்தியா
    ஆசிரியர்கள் ஏற்றிவைத்த வெளிச்சம் என்றைக்கும் மறக்காது..!! ஆசிரியர் தினத்தில் நெகிழ்ந்த இயக்குநர் சீனு ராமசாமி..!

    ஆசிரியர்கள் ஏற்றிவைத்த வெளிச்சம் என்றைக்கும் மறக்காது..!! ஆசிரியர் தினத்தில் நெகிழ்ந்த இயக்குநர் சீனு ராமசாமி..!

    சினிமா
    கௌதம் மேனனுக்கு யோகி பாபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்..!! இதே சந்தோஷத்தோடு சீக்கிரம் படம் இயக்குங்க சார் என ரசிகர்கள்..!

    கௌதம் மேனனுக்கு யோகி பாபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்..!! இதே சந்தோஷத்தோடு சீக்கிரம் படம் இயக்குங்க சார் என ரசிகர்கள்..!

    சினிமா
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    இந்தியா
    காங். Ex. MLA ஹசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை..!! தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்..!!

    காங். Ex. MLA ஹசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை..!! தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

    மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

    இந்தியா
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    இந்தியா
    காங். Ex. MLA ஹசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை..!! தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்..!!

    காங். Ex. MLA ஹசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை..!! தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்..!!

    தமிழ்நாடு
    சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!

    சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!

    அரசியல்
    ஜவ்வாது மலைவாழ் மக்களிடம் ரூ. 1 கோடி லஞ்சம்... 6 பேர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை..!!

    ஜவ்வாது மலைவாழ் மக்களிடம் ரூ. 1 கோடி லஞ்சம்... 6 பேர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share