• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு உயர வேண்டும்": செங்கோட்டையனுக்கு முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பதில்!

    மற்ற மாநிலங்களை விட 100 மடங்கு மேலே செல்ல வேண்டும் என்பதே நமது ஆசை என அமைச்சர் செங்கோட்டையன் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் சு முத்துசாமி பதிலளித்துள்ளார்
    Author By Thenmozhi Kumar Tue, 15 Sep 2026 16:00:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "TN Must Aim 100 Times Higher Than Other States": Former Minister S Muthusamy Responds to Sengottaiyan.

    "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு உயர வேண்டும்": செங்கோட்டையனுக்கு முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பதில்!

    "தமிழகத்தில் மின் தட்டுப்பாடு தொடர்பாகப் பேசியுள்ள அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எனது நீண்டகால நண்பர், அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவர் சொல்வதில் தவறில்லை; எனினும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு வளர்ச்சி அடைந்து மேலே செல்ல வேண்டும் என்பதே நமது தொலைநோக்கு ஆசையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான சு. முத்துசாமி தெரிவித்துள்ளார்."

    பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு. முத்துசாமி பல்வேறு நடப்பு அரசியல் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது, "திமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, நிலப்பட்டா வழங்குதல், தடையற்ற மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வு கண்டனர். மகளிர் உரிமைத் தொகை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மகளிருக்கான விடியல் பயணத் திட்டம் உள்ளிட்டவை அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து பார்த்துச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களாகும். ஆளும் அரசை எப்போது பார்த்தாலும் குறைகூறுவது மட்டுமே எதிர்க்கட்சியின் பிரதான நோக்கமல்ல; மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு ஆக்கப்பூர்வ முன்முயற்சிகளை எடுத்தால் திமுக அதற்கு எப்போதும் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருக்கும்" என்றார்.

    இதையும் படிங்க: கம்யூனிஸ்டுகள் பிரிந்தாலும் தவெகவுக்கு பின்னடைவு இல்லை: வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

    அமைச்சர் செங்கோட்டையன்

    புதிய தலைமைச் செயலக விவகாரம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "புதிய தலைமைச் செயலகமானது அடுத்த 200 முதல் 300 ஆண்டுகால எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 250 முதல் 300 ஏக்கர் பரப்பளவில், போக்குவரத்து நெரிசலற்ற இடத்தில் அனைத்து முக்கிய அரசுத் துறை தலைமை அலுவலகங்கள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் ஒரே குடையின் கீழ் அமையும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். அதேபோன்று, பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் மற்றும் கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஆகியவை தொழில்முனைவோருக்கும் சர்வதேச அளவில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத திட்டங்களாகும்" என்று சுட்டிக்காட்டினார்.

    கூட்டணி மாற்றங்கள் மற்றும் தேர்தல் களம் குறித்துக் கருத்து தெரிவித்த சு. முத்துசாமி, "மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்தக் கட்சிகளின் தலைமைகளே உரிய விளக்கம் அளித்துவிட்டன. தேர்தல் கூட்டணிகளில் ஏற்படும் மாற்றங்கள் திமுகவிற்கு எந்த வகையிலும் பலவீனமாக அமையாது. திமுக தொண்டர்கள் எத்தகைய அரசியல் சவால்களையும் துணிவோடு எதிர்கொண்டு களப்பணியாற்றி வெற்றியை ஈட்டித் தருவார்கள். மேலும், புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்; வீண் அரசியல் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு உழைக்கும் மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து அரசு உடனடியாகத் தீர்வு காண முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: முதல்வர் எல்லோரையும் உற்சாகப்படுத்தவே விரும்புகிறார்..  அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்!

    மேலும் படிங்க
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தமிழ்நாடு
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share