சென்னை: தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் நலிவடைந்த பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்க தமிழக அரசு புதிய திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இதற்காக 2026-2027-ஆம் நிதியாண்டில் ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
5 ஆடுகள் இலவசம்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், பெண்களின் பொருளாதார சுயசார்பை அதிகரிப்பதிலும் கால்நடை வளர்ப்புத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது 5 செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: ஜிபிஎஸ் இல்லாத லாரிகளுக்கு இன்று முதல் தடை! தமிழகம் முழுவதும் புதிய ரூல்ஸ்! கனிம வளக் கடத்தலுக்கு கடிவாளம்!!

30 ஆயிரம் பேர் பயன்பெற இலக்கு!
நிகழாண்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளனர். இதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பை வழங்கி தமிழக அரசு தற்போது ஆணை பிறப்பித்துள்ளது.
ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு!
2026-2027-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஆடுகள் வளர்ப்பதன் மூலம் கிராமப்புற பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு வருமான வாய்ப்பு உருவாகும். குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்புத் தொழிலும் ஊக்கமடையும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் கூறும் வெளிப்படைத்தன்மை எங்கே? அரசாணைகள், புதிய நியமனங்கள்? அரசு இணையதளம் குறித்து எழுந்த புகார்!