2026-யில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலால், இந்த கூட்டணி நீடிக்குமா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறி வரும் நிலையில், அதிமுக தனிப்பெரும்பான்மையுடனே ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி ஆட்சி கிடையாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புது குண்டைத் தூக்கிப்போட்டுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டு மந்திரி சபை தான் அமைக்கும். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்கு வழங்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித்ஷாவிடம் தான் கேட்க வேண்டும்.
இதையும் படிங்க: முதலமைச்சர் யார்? தேர்தலுக்கு பின்புதான் தெரியும்... டிடிவி தினகரன் விளக்கம்!!
அதிமுகவின் விசுவாசியாக இருந்த அன்வர் ராஜா திமுகவிற்கு சென்றது எனக்கு வருத்தம் அளிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் அ.ம.மு.க பெயரை குறிப்பிடாதது குறித்த கேள்விக்கு உங்கள் சந்தேகங்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது. யாரிடம் இது குறித்து கேட்க வேண்டுமோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாய உரத்தில் முறைகேடு... கேள்விக்குறியான விவசாயிகளின் வாழ்வாதாரம்... வெகுண்டெழுந்த டிடிவி!!