கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகமும், அதன் தலைவர் விஜய்யும் மொத்தமாக முடங்கிப்போய்விட்டதாக செய்திகள் வெளியாகின. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் மனமுடைந்த விஜய் அரசியலை விட்டே விலக முடிவெடுத்துள்ளதாக கூட தகவல்கள் வெளியாகின. அப்போது விஜய் கட்சி இதுவரை தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறவில்லை என்ற செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக என எந்த கட்சியுமே நினைக்காத நேரத்தில் முழு வீச்சில் தேர்தல் ஆணைய பணிகளில் களமிறங்கியது தவெக.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், புதிதா தேர்தலில் களம் காணக்கூடிய விஜய் தனது கட்சிக்கான சின்னத்தை தேர்வு செய்வத்ல் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. நாடு முழுக்க சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிற மாநிலங்களுக்கான புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கு. அதாவது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கான பொது சின்னத்திற்கு விண்ணப்பிக்கிறதற்கான தேதிகள் வெளியானது. வாக்கு சதவீதம், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படின்னு இருக்கக்கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல்ல வெற்றி பெறக்கூடிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா மாறும். இப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அந்தந்த கட்சிகள் விரும்புகிற சின்னம் நிரந்தரமா வழங்கப்படுவது வழக்கம். அந்த வரிசையில் தான் திமுகவுக்கு உதய சூரியனும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னமும் இருக்கிறது.
விசிக, நாதக உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரத்தை பெற்று முறையே பானை, விவசாயி சின்னங்களை பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்தோட விதிமுறைப்படி தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவிகிதம் அல்லது வெற்றியை பதிவு செய்யற கட்சிதான் அங்கீகரிக்கப்படும். அந்த வகையில் கரூர் துயர சம்பவத்தை அடுத்து தவெக உடைய அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு மீது பதிலளித்த தேர்தல் ஆணயம், தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சியே இல்லை என தெரிவித்தது.
இதையும் படிங்க: எல்லாம் ரெடி..! லொகேஷன் பாத்தாச்சு... கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்...!
உடனே அது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறினாலும்,அடிப்படையில தேர்தலையே சந்திக்காத கட்சிக்கு அங்கீகாரம் எப்படி தருவாங்க? இதைத்தானே தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது என அரசியல் நிபுணர்கள் பதிலளித்தனர். தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொது சின்னம் கேட்டு நவம்பர் 11ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்காக ஆணையத்திடம் 184 சின்னங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதிலிருந்து கட்சிகள் தங்களுக்குத் தேவையான சின்னங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு கட்சி குறைந்தது 5 முதல் 10 சின்னங்களை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் தான் மகளிர் மற்றும் இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் மனதில் நிற்கக்கூடிய நிறங்களை கவனத்தில் கொண்டு விஜய் 5 சின்னங்களை டிக் அடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல், ஆட்டோ உள்ளிட்ட பல சின்னங்கள் இருக்கக்கூடிய நிலையில் அதில் 5 சின்னங்களை தேர்வு செய்திருக்கும் விஜய் வரும் நவம்பர் 12ம் தேதி சின்னம் கேட்டு விண்ணப்பிக்கவுள்ளாராம். கடைசி நேரத்தில் சின்னம் கேட்டு சென்றால் கேட்கும் சின்னம் கிடைக்காது என்பதால் உடனடியாக விண்ணப்பிக்கக்கூடிய வேலைகளில் பனையூர் அலுவலகம் தீவிரமாக இறங்கியுள்ளதாம். இதன் மூலமாக தவெகவுடைய வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மெல்ல மீண்டெழும் விஜய் கட்சி.. அனல் பறக்கும் அரசியல் களம்... தேர்தல் சின்னம் கேட்கும் தவெக...!