தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த புதிதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயை அன்புடன் தம்பி என்று தான் அழைத்து வந்தார். ஆனால் விக்கிரவாண்டி மாநாடு முடிந்ததில் இருந்தே மிரண்டு போன சீமான், தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பட்டாளம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவி வருவதே சீமானின் இந்த கோபத்திற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சீமான் நேரடியாக விமர்சித்திருந்தார். தவெகவின் கொள்கை என்னவென்று கேட்டால் ‘தளபதி’ என கோஷமிடுவதாக சீமான் சாடியுள்ளார். நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அவங்ககிட்ட ‘என்னடா உங்க கொள்கை’னு கேட்டா, ‘தளபதி… தளபதி’னு சொல்றாங்க, எனக்கு ‘தலைவிதி… தலைவிதி’னு கேக்குது.
‘சரி எதுக்குடா வந்தீங்க’னு கேட்டா, ‘TVK, TVK’னு கத்துறாங்க, எனக்கு ‘டீ விற்க, டீ விற்க’னு கேக்குது. புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: சீமான் ஒழிக.. மதுரை மாநாட்டில் தொண்டர்கள் கோஷம்! பாரபத்தியில் பரபரப்பு..!
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று மதுரையில் நடக்கவுள்ள தவெக மாநாட்டிற்காக குவிந்துள்ள தொண்டர்கள் ‘சீமான் ஒழிக’, ‘சீமான் ஒழிக’ என கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியின் மாநாடு... மரங்களை கட்டி அணைத்து முத்தமிட்ட சீமான்..!