திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அகரம் பகுதியில் ரமணி என்ற வயதான பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போது அவரது சாவில் நடனம் ஆடுவதில் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள், அதனை தடுத்து நிறுத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்
இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்வதற்காக சுடுகாடு பகுதிக்கு எடுத்துச் சென்றபோது இளைஞர்கள் ஒரு புறமாக மது அறிந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களுக்கிடையே வாக்குவாதம் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது அகரம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் மணிகண்டன் என்ற இளைஞரை கழுத்தில் வெட்டியதில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு சுடுகாடு பகுதியில் இருந்தவர்கள் அலறடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் சரிந்து கிடந்த மணிகண்டனை, மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!
இளைஞர் மணிகண்டன் வெட்டப்பட்டது குறித்து தகவல் அறிந்து வந்த கடம்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்மன் அவர்களை தேடி வருகின்றனர்
மேலும் இளைஞர் மணிகண்டனை வெட்டிய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவள்ளூர் சுங்குவார்சத்திரம் சாலையில் மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து திருவள்ளூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அகரம் கிராமத்தில் குவிக்கப்பட்டு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது,
இதனிடையே, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன், நேற்றிரவு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!