தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான தேர்தல் பிரசாரக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
பனையூர் தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரசாரக் கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரக் குழுவின் உறுப்பினர்கள் விபரம்:
N. ஆனந்த்
ஆதவ் அர்ஜுனா B.A.
K.A. செங்கோட்டையன்
A. பார்த்திபன்
B. ராஜ்குமார் DME
K.V. விஜய் தாமு
S.P. செல்வம் DCE
பிச்சைரத்தினம் கரிகாலன்
M. செரவு மைதின் (எ) நியாஸ்
கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed
இக்குழுவில் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பெண்கள் எனப் பலதரப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, களப்பணிகளை முடுக்கிவிடும் நோக்கில் தொகுதி வாரியான ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதே இக்குழுவின் முதன்மையான பணியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!” 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான பிரசாரப் பணிகளை இக்குழு மேற்கொள்ளும். கழகத் தோழர்கள் அனைவரும் இக்குழுவிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தலைவர் விஜய் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் களத்தில் தனது அடுத்தகட்ட நகர்வு தொடங்கியுள்ளதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூட்டணிக்கு நடுவில் கூடலூருக்கு வருகை தரும் ராகுல்! மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம்!