தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழகத்தில் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டுடன் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கலைஞர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கூறியதை இதை சுட்டிக்காட்டி பேசினார்.
உச்சநீதிமன்றம், திமுக தலைமையிலான தமிழக அரசின் கோரிக்கையை கடுமையாக விமர்சித்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க பொது நிதியை பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் உள்ள காய்கறி சந்தை நுழைவாயில் அருகே, கருணாநிதியின் வெண்கல சிலையை நிறுவ அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனு ஒன்றை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கு முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொது இடத்தில் சிலை அமைப்பது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்றும், அரசு அத்தகைய அனுமதியை வழங்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்ற விசாரணையின்போது நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
இதையும் படிங்க: விவசாய கடன் தள்ளுபடி… லஞ்சமில்லா நெல் கொள்முதல்.. தஞ்சையில் விஜய் மாஸ் வாக்குறுதி..!
பொது நிதியை முன்னாள் தலைவர்களை புகழ்வதற்கு ஏன் பயன்படுத்த வேண்டும் என்று நேரடியாக கேட்டனர். இது அனுமதிக்க முடியாதது என்று தெளிவாக தெரிவித்தனர். முன்னாள் தலைவர்களை கௌரவிப்பது தனியார் நிதி மூலமே நடைபெற வேண்டும் என்றும், வரி செலுத்தும் மக்களின் பணம் பொது நலத்துக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய விஜய், ஊரான் வீட்டு நெய்யில SWEET செய்யாதீங்க என்பதை தான் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மணல் மாஃபியாக்களுக்கு திமுக ஆதரவு… தமிழ்நாடே திவால்..!! பொளந்து கட்டிய விஜய்..!!