இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு, குறிப்பாக கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட மண்ணான ஈரோட்டில் ஒரு மினி மாநாட்டையே நடத்தி முடித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். தன்னுடைய சுமார் 30 நிமிட உரையில் தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததோடு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடைய அரசியலையும் கையில் எடுத்திருக்காரு.
தவெக இணைந்த செங்கோட்டையன் அடுத்த 20 நாட்களில் தன்னுடைய சொந்த மாவட்டமான ஈரோட்டுக்கு விஜயை அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் கூட்டத்தை நடத்தி தன்னுடைய அரசியல் அனுபவம் என்னவென காட்டியிருக்கிறார். சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைஞ்ச கூட்டத்தில் தவெக தொண்டைகளும் பொதுமக்களும்
நிரம்பி வழிய காலை 11.15 மணிக்கு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார் தவெக தலைவர் விஜய். விஜயுடைய பிரச்சார பேருந்தே மேடையாக நிற்க செங்கோட்டியன் பேச ஆரம்பிச்சாரு. அதற்கு பிறகு தலைமை கழக நிர்வாகிகள் பேசி முடிக்க இறுதியாக வந்து பேசினார் விஜய். ஈரோட்டு மண்ணுக்கே உரிய மஞ்சள் விளைச்சல் அதை சந்தைப்படுத்தும் போது இருக்கக்கூடிய சவால்களை பேசிட்டு காளிங்கராயர் அணையையும் அதனுடைய முக்கியத்துவத்தையும் பற்றி பேச ஆரம்பித்தாரு. மஞ்சளுடைய மகத்துவத்தை சிலாகிச்சி பேச தொடங்கி அடுத்த அரை மணி நேரத்திற்கு அவருடைய பேச்சு நீண்டது.
இதையும் படிங்க: அளப்பரிய ஆதரவு… எவ்வளவு நன்றி சொன்னாலும்… விஜய் உருக்கம்…!
செப்டம்பர் 13ம் தேதி மாவட்டவாரியா தமிழ்நாடு தழுவி அளவில் பிரச்சாரத்த தொடங்கின விஜய் அடுத்த மூன்று தேதிகளில் ஆறு மாவட்டங்களுக்கு பயணிச்சு ஒரு அலையையே உருவாக்கி இருந்தாரு. ஆனா கரூர் கூட்ட நெரிசல் அது எல்லாத்தையுமே முடக்கி போட, ஒரு மாத மௌனத்துக்கு பிறகு சிறப்பு பொதுக்குழு, காஞ்சிபுரம் உள்ளரங்கு சந்திப்பு, புதுச்சேரி விசிட் அப்படின்னு பயணிச்சு, இப்போ ஈரோட்டில் பேசி இருக்காரு. இங்கே கவனிக்க வேண்டிய விஷயமே நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்றைய தினம் விஜய் உடைய பேச்சில் ஆவேசம் அதிகமாவே இருந்தது.
சொன்னீங்களே செஞ்சீங்களா என திமுகவுடைய தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்டு கேள்வி எழுப்பின விஜய். சூழ்ச்சிகளை செஞ்சு தன்னை எப்படியாச்சும் காலி பண்ணிடலாம் அப்படின்னு ஒரு கூட்டம் நினைப்பதாகவும், தனக்கும் மக்களுக்குமான உறவு 33 வருஷத்துக்கு மேலானதுன்னு சொன்னாரு. என்ன பண்ணாலும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்க இந்த விஜயை மக்கள் கைவிட மாட்டாங்க அப்படின்னு நம்பிக்கையாக பேசினார்.
அடுத்த நொடியே என்னப்பா நிப்பீங்க இல்ல அப்படின்னு கேட்டு, உங்களை நம்பித்தான் வந்திருக்கேன் அப்படின்னு சொல்ல ஒட்டுமொத்த கூட்டமும் “டிவிகே டிவிகே” என ஆர்ப்பரிச்சாங்க. இதுக்கான ரிப்ளையாக வாழ்நாள் முழுக்க நன்றியோட இருப்பேன் அப்படின்னு சொன்னாரு விஜய்.
வள்ளுவர் கோட்டத்துக்கு காட்டுற அக்கறையை மக்களுடைய வாழ்வாதாரத்தில காட்டலாமே. கவர்மெண்ட் நடத்துறீங்களா? இல்ல கண்காட்சி நடத்துறீங்களா? அப்படின்னு கேட்டுட்டு, பெரியார் என்னுடைய கொள்கை தலைவர். அவர்கிட்ட இருந்து தேவையான கொள்கைகளை எடுத்துக்கிட்டேன். பெரியாரை ஃபாலோ பண்ண அண்ணா, எம்ஜிஆர்கிட்ட இருந்து தேர்தல் அணுகு முறைகளை எடுத்துக்கிட்டேன்னு தன் மீதான விமர்சனத்துக்கும் பதில் சொன்னார்.
தவெக தான் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையே அப்புறம் ஏன் கதர்றீங்க, புலம்புறீங்க அப்படின்னு கேட்ட விஜய், உங்களுக்கு காசு துணை எனக்கு இந்த மக்களுடைய மாஸ் துணைன்னு ஒரு பஞ்ச் அடிச்சாரு. பெரியாரோட பேரை சொல்லி கொள்ளை அடிக்காதீங்க அப்படின்னு பேசினவரு 2026 தேர்தலில் எங்களுக்கு யாரு களத்துல போட்டியா இருக்கீங்களோ அவங்களை மட்டும்தான் எதிர்ப்போம். சும்மா களத்துலயே இல்லாதவங்களையும் களத்துக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்கிற ஐடியா இல்லை என அதிமுகவையும், நாம் தமிழர் கட்சியையும் தாக்கி பேசினார்.
விஜய்க்கு அரசியல் தெரியுமா? அரசியல் பேசுவாரா? என்ன ஒரு 10 நிமிஷம், ஒன்பது நிமிஷம் தான் பேசுறாருன்னு சொல்றீங்களே நான் என்ன பேசுகிறார் என்கிறார்கள். உங்களுக்கு எத்தனை நிமிஷம் பேசினா என்னன்னு கேள்வி எழுப்பினாரு தன்னுடைய முந்தைய பேச்சுல தேர்தல் வாக்குறுதிகள் தவறாசித்தரிக்கப்பட்டதாகவும், தான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாதுன்னு பேசினாரு. மக்கள மக்களுக்கான சலுகைகளை இலவசம்னு சொல்லி அசிங்கப்படுத்துறதுல எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் காசுல மக்களுக்கு செய்றதை எப்படி இலவசம்னு சொல்லுவீங்க. அப்படியே செஞ்சிட்டாலும் ஓசி ஓசின்னு சொல்லி அசிங்கப்படுத்துறீங்க. என்ன கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சிட்டீங்களா? அப்படின்னு கேட்டுட்டு, ஏன் மக்கள் யாருக்கும் கீழ கிடையாது. கௌரவத்தோட வாழ மக்களுடைய வாழ்க்கை தரம் உயரணும். பொருளாதாரம் உயரணும். பொருளாதாரம் உயர்ந்தாதான் வாழ்க்கை தரம் உயரும் எனக்கூறினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடைய தீய சக்தி திமுக அப்படிங்கிற ஸ்டேட்மெண்ட்ட ரிப்பீட் மோட்ல சொன்ன விஜய், தவெக ஒரு தூய சக்தி அப்படின்னு ஒரே போடா போட்டாரு. இங்க தூய சக்தியான தவெகவுக்கும், தீய சக்தியான திமுகவுக்கும் தான் போட்டியே, என்னை யாராலும் வீழ்த்த முடியாதுன்னு சொன்னவர், அண்ணன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது மிகப்பெரிய பலம். அதேபோல இன்னும் பலர் கட்சியில் சேர இருக்காங்க அப்படின்னு மேடையிலேயே அறிவிச்சாரு.
அதேபோல என் கேரக்டர புரிஞ்சுக்கவே மாட்றீங்களே அப்படின்னு திருவண்ணாமலையில் இளைஞரணி மாநாட்டில் முதல்வர் பேசின விஷயத்தையும் குறிப்பிட்டு, “நான் பேசினா சினிமா வசனம் நீங்க பேசினா அது சிலப்பதிகாரமா?” அப்படின்னு பதிலடியும் கொடுத்தாரு. என்னுடைய கேரக்டர தான் நீங்க புரிஞ்சுக்கல, இது மக்களோட கேரக்டர் அதை புரிஞ்சுக்கோங்க சார் அப்படின்னு சொன்னதோட நன்றி வணக்கங்க சார்ன்னு ஒரு உற்சாக தோணியிலேயே முதல்வருக்கு சவால் விட்டு பேச்ச முடிச்சாரு விஜய்.
ஒட்டுமொத்தமாக தவெக தலைவர் விஜயுடைய இந்த உரையை பொறுத்தவரைக்கும் திமுமீதான விமர்சனத்தை கூர்மைப்படுத்தினதோட மீண்டும் சவால் விடும் தோரணையில் பேச ஆரம்பிச்சிருக்காரு. அதே சமயம் திருப்பரகன்றம் விஷயத்தை பத்தி பேசாம போனது பல கேள்விகளை எழுப்பி இருக்கு. அதோட பாஜகவை நேரடியா தாக்கி பேசாததும், நான் தாக்காதற்கு காரணம் 2026 காலத்துல இருக்கவங்களை மட்டும்தான் எதிர்க்கிறேன் அப்படின்னு சொன்னதும் தந்திரமா இருந்தாலும் பாஜாகாவை சாப்டாவே அணுகறாரு அப்படின்னு விமர்சனங்கள் எழுந்திருக்கு.
இதையும் படிங்க: தூயசக்தி... தீயசக்தி... விஜய்க்கு அடுக்குமொழி பேச்சை கத்து கொடுத்து இருக்காங்க... - திருமா.