புதுச்சேரி: உப்பளம் துறைமுக திடலில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். “தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டும் இல்ல… புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என ஏற்கனவே யோசித்து வைத்திருக்கிறார். 1970-களில் எம்.ஜி.ஆர். செய்தது போல, புதுச்சேரியிலும் நல்ல முதலமைச்சரை விஜய் உருவாக்குவார்!” என்று கூறி மைதானத்தையே அதிரவைத்தார்.
விஜய் மேடைக்கு வருவதற்கு முன்பாக பேசிய ஆதவ் அர்ஜுனா, “இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கிறது புதுச்சேரி காவல்துறை. முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு நன்றி. தமிழகத்தில் எந்த அரசும் இப்படி பாதுகாப்பு கொடுத்ததில்லை. தமிழக முதலமைச்சர், உங்களுக்கு தில் இருந்தால் தேர்தலில் நேருக்கு நேர் மோதுங்கள்… எங்கள் பிரசாரத்தை முடக்காதீர்கள்!” என்று திமுக அரசை நேரடியாக சாடினார்.

“காற்றையும் வெள்ளத்தையும் நிறுத்த முடியுமா? தவெக பிரசாரப் பயணம் 72 நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கிவிட்டது. ‘விஜய் ஏன் புதுச்சேரிக்கு வர்றார்?’னு கேட்கிறாங்க. புதுச்சேரி மக்கள் நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருத்துவம், நல்ல போக்குவரத்து, வேலைவாய்ப்பு… இதுக்கெல்லாம் ஏங்குறாங்க. அந்த ஏக்கம்தான் இந்தக் கூட்டம்!” என்று உருக்கமாகப் பேசினார்.
இதையும் படிங்க: Blast-uh! Blast-uh!! 11 நிமிஷம் ஃபயர் பேச்சு!! புதுச்சேரியில் விஜய் வெறித்தனம்! மாஸ் ப்ரோ!
“எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும்னு யோசிச்சார். அதே மாதிரி நம்ம தலைவர் விஜயும் தமிழகத்துக்கு மட்டும் இல்ல… புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும்னு ஏற்கனவே திட்டம் போட்டு வைத்திருக்கார். விரைவில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் பங்கேற்கும் மாபெரும் பிரசாரக் கூட்டத்தை நடத்துவோம். புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா?னு ஏங்குற மக்களுக்கு இந்தக் கூட்டம் ஒரு தொடக்கம் மட்டுமே!” என்று உற்சாகப்படுத்தினார்.
“1970-ல் உருவானது போல… புதுச்சேரியிலும் நல்ல முதலமைச்சரை விஜய் உருவாக்குவார்!” என்று கூறியதும் மைதானம் முழுவதும் “தளபதி… தளபதி…” கோஷம் எழுந்தது.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த ஒரு பேச்சு போதும் – புதுச்சேரி அரசியல் களமே திரும்பிப்பார்க்க வைத்துவிட்டது. தவெக-வின் புதுச்சேரி பிரவேசம் இது வெறும் விஜய் ரசிகர் கூட்டம் இல்லை… 2026-க்கான மாபெரும் அரசியல் அறிவிப்பு என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டது என தவெக தொண்டர்கள் உணர்ச்சி பொங்க கூறினர்.
இதையும் படிங்க: நாங்க போராடுவோம்... போராட்டத்தில் குதித்த அங்கன்வாடி ஊழியர்கள்... குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்...!