புதுச்சேரி: கரூர் சோகத்துக்குப் பிறகு தவெக தலைவர் விஜய் பேசிய முதல் பெரும் பொதுக்கூட்டம் இன்று (டிசம்பர் 9) உப்பளம் துறைமுக திடலில் நடைபெற்றது. காலையில் சிறு குழப்பமும் தடியடியும் நடந்தாலும், விஜய் மேடை ஏறியதும் மைதானம் “தளபதி… தளபதி…” கோஷத்தில் அதிர்ந்தது. வெறும் 11 நிமிடங்களே பேசினார் விஜய்… ஆனால் அந்த 11 நிமிடங்கள் தமிழக-புதுச்சேரி அரசியலை புரட்டிப்போட்டுவிட்டது!
“என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம்!” என்று தொடங்கிய விஜய், “மத்திய அரசுக்கு தமிழ்நாடு தனி, புதுவை தனி… ஆனால் நமக்கு நாம் வேறு வேறு கிடையாது. நாம் எல்லாம் சொந்தம் தான்!” என்று உருக்கமாகப் பேசினார். பாரதி இருந்த மண், பாரதிதாசன் பிறந்த மண், எம்ஜிஆர் முதலில் ஆட்சி அமைத்த மண் என்று புதுச்சேரியைப் புகழ்ந்தார்.
“30 வருஷமா என்னை தாங்கிப் பிடிக்கிற புதுவை மக்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கேன். விஜய் தமிழகத்துக்கு மட்டும் குரல் கொடுக்க மாட்டார்… புதுவைக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பார்!” என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியை பார்த்து கத்துக்கோங்க ஸ்டாலின்!! கிழித்துத் தொங்கவிட்ட விஜய்! தவெகவினர் உற்சாகம்!
பின்னர் புதுவை அரசை வானளாவப் புகழ்ந்தார்: “தமிழகத்தில் உள்ள திமுக அரசு மாதிரி புதுவை அரசு கிடையாது. வேற கட்சி நிகழ்ச்சி என்றாலும் பாதுகாப்பு தர்றாங்க. புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கும் அரசுக்கும் மனமார்ந்த நன்றி! இதைப் பார்த்தாவது திமுக அரசு கற்றுக்கணும்… ஆனா கற்றுக்க மாட்டாங்க. 2026-ல் மக்கள் கற்றுக்கொடுப்பாங்க!” என்று கர்ஜித்ததும் மைதானம் பூமி அதிருமளவுக்கு கைத்தட்டல் முழங்கியது.

மத்திய அரசு மீது அனல் பறக்கத் தாக்கினார்: “புதுவை ஆளும் கட்சி மத்திய கூட்டணியில் இருந்தாலும், மத்திய அரசு புதுச்சேரியை கண்டுகொள்ளவே இல்லை. மாநில அந்தஸ்து கோரி 16 தீர்மானங்கள் அனுப்பியும் ஒரு துரும்பு கூட கிள்ளல. மூடிய மில்களைத் திறக்கல, ஐடி நிறுவனம் கொண்டுவரல, வேலை வாய்ப்பு இல்லை, காரைக்கால் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு இல்லை, சுற்றுலா வசதி இல்லை… இதையெல்லாம் மாற்றணும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கித்தரணும். ரேஷன் கடை கூட இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரிதான். ஏழை மக்களுக்கு அரிசி, சர்க்கரை ரேஷன்ல வழங்கணும்!” என்று ஒவ்வொரு பிரச்னையாகப் பட்டியலிட்டார்.
“திமுகவை நம்பாதீங்க… அவங்க வேலை உங்களை ஏமாற்றுறது தான்!” என்று திமுக மீது நேரடியாக பாய்ந்தார். “தமிழகத்தை ஒதுக்கின மாதிரி புதுச்சேரியையும் ஒதுக்க விட மாட்டோம். வரும் பேரவைத் தேர்தலில் தவெக கொடி பட்டொளி வீசும். நம்பிக்கையோடு இருங்கள்… நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம்!” என்று 11 நிமிடத்தில் பேச்சை முடித்து இறங்கினார்.
வெறும் 11 நிமிடங்கள்… ஆனால் அந்தப் பேச்சு தமிழக-புதுச்சேரி அரசியல் களத்தை புரட்டிப் போட்டுவிட்டது. மத்திய அரசையும் திமுகவையும் ஒரே நேரத்தில் தாக்கி, புதுவை முதல்வரைப் புகழ்ந்து, மக்கள் ஆட்சி வரும் என்று உறுதியளித்த விஜய்யின் இந்த உரை இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நாங்க போராடுவோம்... போராட்டத்தில் குதித்த அங்கன்வாடி ஊழியர்கள்... குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்...!