• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முருக பக்தியைக் கண்டு ஏமாறுவதற்கு திராவிட மண் இடந்தராது... கீ.வீரமணி ஆவேசம்!!

    சட்டப்பேரவைத் தேர்தலில் பக்தி போதையை ஓட்டு வங்கியாக்கிக் கொள்ளவே ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டம் மாநாடு போடுவதாக திராவிடர் கழக தலைவருமான கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
    Author By Raja Tue, 10 Jun 2025 19:07:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Veeramani has said that the RSS and Sangh Parivar are holding a conference to turn devotionalism into a vote bank in the assembly elections

    திமுக கூட்டணியை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் வகையறாக்களான ஹிந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் போன்ற ஆரிய (ஹிந்து) மதவெறி கட்சிகளின் திடீர் 'முருக பக்தி'யைக் கண்டு, ஏமாறுவதற்குப் பெரியார் மண்ணான திராவிட மண் - தமிழ்நாடு ஒருபோதும் இடந்தராது. சென்ற சில மாதங்களுக்கு முன்பே, இப்போது அரசியல் 'புது இடந்தேடி'யாகியுள்ள அண்ணாமலை போன்றவர்கள் முன்னின்று, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்படச் செய்யவே, ''திருப்பரங்குன்றத்திலுள்ள முருகன் கோவிலுக்கு ஆபத்து, அந்த மலையை இஸ்லாமியர்கள் தங்கள் வயப்படுத்த, தங்களது மதநெறிக்கு ஏற்ப 'சிக்கந்தர் மலை' என்று மாற்றிட முயற்சிக்கிறார்கள், ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்'' என்று அங்கே கண்டன ஆர்ப்பாட்டக் கலவரம் ஏற்படுத்த முயன்று தோற்றுவிட்டனர். அவ்வூரில் உள்ள அனைத்து மக்களும் ஹிந்து, முஸ்லிம் மற்றும் நம்பிக்கையாளர் அல்லாத குடிமக்கள் எல்லோரும் ஒரே குரலில், ''நாங்கள் ஒன்றுபட்டு சகோதரர்களாக வாழுகிறோம்; ஏன் வெளியூர் ஆட்களைக் கொணர்ந்து இங்கே கலவரம் உருவாக்க முயற்சிக்கிறீர்கள்'' என்று முகத்தில் அறைந்தார் போல் கேட்டனர்.

    assembly election

    அந்தக் கலவர முயற்சிகள் வெறும் 'புஸ்வாணம்' ஆகிவிட்டன. என்றாலும், மக்களுக்குள்ள கடவுள் பக்தியைப் பயன்படுத்தி, கோவில்களை ஆர்.எஸ்.எஸ். மற்றும் புரோகித வர்க்கம் தங்களது ஆதிக்கப் பீடங்களாகவே ஆக்கிக் கொள்ளும் வித்தையில் கைதேர்ந்தவர்களாகிவிட்டதால், கோவில், திருவிழா, சடங்கு, சம்பிரதாயங்களை ஒரு வாய்ப்பாக்கி, மக்கள் பகுத்தறிவு, சமத்துவம், சுயமரியாதைக்குக் கேடு விளைவிக்கின்றனர். 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், இந்தப் பக்தி போதையை 'ஓட்டு வங்கி'யாக்கிக் கொள்ளவே ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டம் முருகக் கடவுளைக் காப்பாற்ற மாநாடு போடுகிறார்களாம்! சர்வ சக்தி வாய்ந்த கடவுளுக்கு இவர்களின் பாதுகாப்பு ஏன் தேவை? என்று சிறுபிள்ளைக்கூட - பகுத்தறிவுடன் கேள்வி கேட்குமே தமிழ்நாட்டில்! இது பக்தியில்லை; அல்லவே அல்ல! ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கூட்டத்தினர் தி.மு.க. ஆட்சியை ஒழித்திட, மற்ற வியூகங்கள் அனைத்தும் தோற்றுவிட்டதால், முழுக்க முழுக்க மதக் கலவரம் ஏற்படுத்திட, புதிய அரசியல் - 'பக்தி ஆயுதமாக' முருகக் காதல் பொத்துக் கொண்டு வந்துவிட்டது! வட மாநிலங்களில் எல்லாம் 'ராம், ராம்' என்று ராமன் கோவிலைக் காட்டி உ.பி. போன்ற மாநில ஆட்சிகளை முன்பு கைப்பற்றினர்.

    இதையும் படிங்க: வெற்றி வாய்ப்புகளை தன்பக்கம் திருப்பும் பாஜக.. செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு..!

    assembly election

    ஆனால், அதில்கூட 'God Show' பிரதமர் மோடி நடத்தியும், அயோத்தியிலேயே கூட பி.ஜே.பி. வெற்றி பெறாமல் எதிர்க்கட்சியினரே வெற்றி பெற்றனர்! அதேபோல், மேற்குவங்கத்தில் காளி பூஜை ஒரு முக்கிய பண்டிகை. சில மாதங்களுக்கு முன்பு, அதிலும் தலையிட்டுப் பார்த்தனர். காளி பக்திக்கும், இராம பக்திக்கும்கூட எதிர்களங்கள் அமைத்து, அங்குள்ள பா.ஜ.க. அல்லாத திரிணாமுல் காங்கிரஸ் மம்தா ஆட்சியை அகற்ற, 'கஜகர்ணம்' போட்டு, மூக்குடை பட்டனர்! தமிழ்நாட்டில் ஏற்கெனவே பா.ஜ.க. தமிழ்நாடு கட்சித் தலைவர் வேலோடு சுற்றிச் சுற்றி வந்தார்; முருகன் அருள்பாலிக்கவில்லை என்பது நாடறிந்த உண்மை! மீண்டும் 'திராவிட மாடல்' ஆட்சி என்பது அசைக்க முடியாத கொள்கைக் கோட்டையாக உள்ளது! வேலைத் தூக்கியவர், முன்பு தாராபுரம் தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றார். பிறகு நீலகிரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஆ.இராசாவை எதிர்த்து நின்றபோது, முடிவு என்னாயிற்று என்பது எல்லோரும் அறிந்ததே! தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக வாக்காளர்கள் தங்களது பக்தி உணர்வுக்காக ஒருபோதும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்ளவே மாட்டார்கள். தமிழ்நாட்டில், இரண்டு, மூன்று முறை தோற்றும் இப்போதும் பாடம் கற்கவில்லை.

    assembly election

    சில அரசியல் அடமானங்களும், அரசியல் புரோக்கர்கள் வீசும் வலையில் சிக்கும் பேர அரசியல்வாதிகளும் புதிய தெம்பாகி விட முடியாது. தமிழ்நாட்டில் மீண்டும் 'திராவிட மாடல்' ஆட்சி என்பது அசைக்க முடியாத கொள்கைக் கோட்டையாக உள்ளது! ஊழலைப்பற்றி இங்கே வந்து 'சண்ட மாருதம் பேசும்' அமித்ஷாக்கள், அவர்கள் கட்சி ஆளும் உ.பி., ம.பி., ராஜஸ்தான் மற்றும் பல மாநிலங்கள் ஆட்சிகளின் லட்சணம்பற்றிய செய்திகளை மறந்துவிட்டா பேசுவது? இராமனைக் காட்டி, வெற்றி தேட முனைந்த 1971 இல் தமிழ்நாட்டுத் தேர்தல் கதையும், முடிவுகளும்பற்றி அமித்ஷாக்கள் அறிந்திருக்க முடியாது. அப்போது அவருக்கு அரசியல் களமே தெரிந்திருக்க வாய்ப்பில்லையே! எனவே, இவர்களின் அரசியல் 'சித்து' விளையாட்டுகள், பம்மாத்து பேரங்களுக்கு சில சபல புத்திக் கட்சிகளும், ஏல அரசியல்வாதிகளும் கிடைப்பார்களே தவிர, வெற்றிக் கனியைப் பெறலாம் என்று நினைத்து, தி.மு.க. கூட்டணியை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆப்பசைத்த கதைதான் - நாளைய வரலாறு சொல்லும் என்பது உறுதி! என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வார்த்தையை விட்ட அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு டிரைக்ட் வார்னிங்.. ஆடிப்போன அதிமுக தலைகள்..!

    மேலும் படிங்க
    உச்சபட்ச கவர்ச்சி படத்தில் ரட்சிதா.. இனியும் இப்படி தானா..? நடிகை முடிவால் இளசுகள் ஹேப்பி...!

    உச்சபட்ச கவர்ச்சி படத்தில் ரட்சிதா.. இனியும் இப்படி தானா..? நடிகை முடிவால் இளசுகள் ஹேப்பி...!

    சினிமா
    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்..  மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    உலகம்
    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    அரசியல்
    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    அரசியல்
    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    உலகம்
    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்..  மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    உலகம்
    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    அரசியல்
    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    அரசியல்
    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    உலகம்
    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share