கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து தற்போதுவரை அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்இந்த வார இறுதிக்குள் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அவரது கட்சி சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஈமெயில் மூலமாக தலைமையில் இருந்து காவல்துறைக்கு பாதுகாப்பு கேட்டும், அனுமதி கேட்டும் ஈமெயில் மூலமாக கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தகவல் கிடைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி தர மறுக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து பாதுகாப்பு கோர தவெகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வார இறுதிக்குள் பாதிக்கப்பட்ட நபர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் இருந்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நேற்று பாதிக்கப்பட்ட நபர்களை நேரடியாக வீடியோ கால் மூலம் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். தவெக கரூர் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மூலமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களை விஜய் தொடர்பு கொண்டதாகவும், அப்போது விரைவில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன் என உறுதியளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: தவெக + காங்கிரஸ் கூட்டணி... ராகுல் காந்திக்கு போன் போட்ட விஜய்... நேரடியாக வைத்த ஒற்றை கண்டிஷன்...!
எனவே தான் இந்த வார இறுதிக்குள் விஜய் அவர்களை நேரடியாக சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளதோடு, தனது கையாலயே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 10 நாள் கழித்து இதுதேவையா? - கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துடன் வீடியோ காலில் 10 நிமிஷம் பேசிய விஜய்...!