மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமாரின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இது கொலையாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டி, உரிய நீதி விசாரணை கோரி வருகின்றனர். இதையடுத்து இளைஞர் அஜித்தை விசாரிக்க அழைத்து சென்ற காவலர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் நிகழ்ந்த 24 காவல் நிலைய மரணங்கள் குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதையும் படிங்க: களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடம் அன்றைய தேதியில் வேறு காரணத்திற்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி காவல் துறையால் அளிக்கப்பட்ட மாற்று இடத்தில் (சிவானந்தா சாலையில்) 06.07.2025 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் தலைநகர் சென்னையே அதிரும் வகையில் ஒரு லட்சம் பேரை திரட்டி போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என விஜய் நேரடியாக த வெக தொண்டர்களுக்கு போட்டிருக்கிறாராம். இதனை ஏற்று தொண்டர்களும் தீயால் வேலையை ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: போராட்டத்தை தள்ளிவைத்த தமிழக வெற்றிக் கழகம்.. காரணம் இதுதான்.. வெளியானது முக்கிய தகவல்!!