நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக இரண்டாம் ஆண்டு மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது இன்னிலையில் மாநாட்டிற்கு கால் கோள் விழா இன்று காலை 5.25 மணிக்கு யாகபூஜையுடன் தொடங்கியது
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு கால்கோல் விழா மதுரை பாரப்பத்தியில் நடைபெற்றது. விழாவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக கும்பங்கள் பூஜைக்கு தயார் செய்யப்பட்டு மதுரை பாண்டி முனீஸ்வரர் முதல் மடப்புரம் காளி சமயபுரம் மாரியம்மன் திருப்பரங்குன்றம் முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தாலும் ஹைலைட்டாக எம்மதமும் சம்மதம் என்று குறிக்கும் வகையில் நடுவில்
இதையும் படிங்க: அம்மா ஷோபாவை வைத்து விஜய்க்கு பாஜக கட்டிய வலை... அமித் ஷாவின் ப்ளானை புட்டு புட்டு வைத்த அப்பாவு...!
விநாயகர் மற்றும் வேளாங்கண்ணி மாதா குழந்தையுடன் மெக்கா படம் நடுவில் இடம் பெற்றது.காலை 4 மணிக்கு கால் கோல் விழா என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சாலை 5.10 மணிக்கு வருகை தந்தார். அதன் பின் யாக பூஜைகள் நடைபெற்றது.
15 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் அவர்கள் பாதுகாப்பு வந்து பாதுகாப்பாக செல்லவே இந்த யாக பூஜைகள் நடைபெறுகிறது. அதில் அனைவரும் மந்திரங்கள் கூறுமாறு சிவாச்சாரியார் கூறினார்.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!