தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், நேற்று மாலை திடீரென அந்த தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த சர்ப்ரைஸ் விசிட் பெரம்பூர் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூரில் த.வெ.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைக்கு விஜய் நேரில் சென்றார். அங்கு காத்திருந்த தொண்டர்கள், பெண் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விஜய்யைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் ஆரவாரம் செய்தனர். விஜய் சிறிது நேரம் பணிமனையை சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கிருந்த பெண்களுடன் இணைந்து தன் கட்சியின் ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்தார்.

விஜய் வந்த செய்தி அக்கம் பக்கத்து வீடுகளுக்கு வேகமாகப் பரவியது. உடனே அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டு வந்தனர். விஜய்யை நேரில் பார்த்த குழந்தைகள் விசில் ஊதி ஆரவாரம் செய்து உற்சாகம் அடைந்தனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக களம் இறங்கும் கமல்!! ஸ்கெட்ச் ரெடி! திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!
பெரம்பூரில் மக்களுடன் நேரில் சந்திப்பு !
விசில் சின்னம் கோலமாக வரைந்த தளபதி விஜய் !
தொகுதி வளர்ச்சிக்காக பொதுமக்களுடன் கலந்துரையாடல் !#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026 pic.twitter.com/mWNXy3Tgxr
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) April 18, 2026
அதன் பிறகு விஜய் அருகில் உள்ள வீடுகளுக்கு ஒவ்வொன்றாகச் சென்றார். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து குடும்ப உறுப்பினர்களுடன் அன்புடன் பேசினார். பெண்கள் விஜய்க்கு தண்ணீர் கொடுத்து உபசரித்தனர்.
https://x.com/TVKHQITWingOffl/status/2045385264311496817
அவர் அதைப் பருகியபோது, ஒரு பெண் விபூதி பூசி “தேர்தலில் வெற்றி பெறுவீர்கள்” என்று வாழ்த்தினார். சில வீடுகளில் குழந்தைகளுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்த விஜய், அனைவரிடமும் “விசில் சின்னத்தில் மறக்காமல் வாக்களியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
விஜய்யின் இந்த திடீர் வீடு வீடாக பிரசாரம் பெரம்பூர் மக்களை மிகவும் கவர்ந்தது. அவர் வீடுகளுக்குள் நுழைந்து பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொதுமக்கள் மத்தியிலும் இந்த நிகழ்வு பெரும் பேச்சாக உள்ளது.
தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், விஜய்யின் இந்த எளிய மற்றும் நெருக்கமான பிரசார உத்தி த.வெ.க. தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் திடீர் வருகை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினை எதிர்க்கும் 34 பேர்!! விஜய்க்கு எதிராக 46 பேர்!! சூடு பிடிக்கும் அரசியல் களம்!