• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விருதுநகரை அலறவிட்ட சம்பவம்... ரத்தம் தெறிக்க தெறிக்க இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம்: திருச்சுழி அருகே இளைஞர் வெட்டிக்கொலை. 6 பேர் கொண்ட கும்பல் கைது.போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
    Author By Amaravathi Wed, 02 Sep 2026 10:45:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    viruthunagar youth murder

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை திருச்சுழி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இராமநாதபுரம் மாவட்டம் செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்மானா பேகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    ஆகாஷ் கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் செந்தனேந்தல் பகுதியில் கரிமூட்டம் போடும் தொழில் தொடர்பாக ஏற்பட்ட போட்டி காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் ஆகாஷுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!

    இந்த முன்விரோதத்தின் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஆகாஷ், முருகனின் கையை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கமுதி காவல் நிலையத்தில் வழக்கும் நடைபெற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, கடந்த 6 மாதங்களாக ஆகாஷ் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 20 நாட்களுக்கு முன்புதான் அவர் மீண்டும் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில், முருகனின் மகன் விஜய் (26), ஆகாஷை கொலை செய்யும் நோக்கத்துடன் தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஆகாஷ், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மண்டலமாணிக்கம் பகுதியில் வசித்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், சம்பவத்தன்று மண்டலமாணிக்கம் கிராமத்தில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் திருச்சுழி வழியாக ஆகாஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆயுதங்களுடன் ஆகாஷை பின்தொடர்ந்து விரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அச்சமடைந்த ஆகாஷ், தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிலர் தன்னை ஆயுதங்களுடன் துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மீண்டும் ஆகாஷை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், ஆகாஷ் சென்ற சாலையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆகாஷ் பலத்த காயங்களுடன் சாலையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆகாஷை ஆயுதங்களால் தாக்கி வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவரது மனைவி திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    போலீசாரின் விசாரணையில், தொழில் போட்டி காரணமாக ஆகாஷுக்கும் முருகனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த முன்விரோதம், பின்னர் முருகனின் மகன் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் கொலைச் சம்பவமாக மாறியிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் விஜய் (26), அவரது நண்பர்களான ரித்தீஷ் (24), முரளி (27), காளிதாஸ் (21), சக்திவேல் (19), தினேஷ்குமார் (19) ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் திருச்சுழி காவல் நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தொழில் போட்டியில் தொடங்கிய முன்விரோதம், இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்படும் அளவுக்கு சென்ற சம்பவம் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    மேலும் படிங்க
    பரமக்குடியில் குவிந்த அரசியல் கட்சி தலைவர்கள்... இம்மானுவேல் சேகரனுக்கு அமைச்சர்கள் முதல் உதயநிதி வரை மரியாதை...!

    பரமக்குடியில் குவிந்த அரசியல் கட்சி தலைவர்கள்... இம்மானுவேல் சேகரனுக்கு அமைச்சர்கள் முதல் உதயநிதி வரை மரியாதை...!

    அரசியல்
    இந்திய ஊழியர்களுக்கு ஷாக்.. H-1B விசா புதுப்பிப்பின் 60 நாள் அவகாசம் இனி இல்லையா? அதிரடி காட்டும் டிரம்ப்!!

    இந்திய ஊழியர்களுக்கு ஷாக்.. H-1B விசா புதுப்பிப்பின் 60 நாள் அவகாசம் இனி இல்லையா? அதிரடி காட்டும் டிரம்ப்!!

    உலகம்
    திரிஷா லண்டன்ல.. நேத்து CM விஜயும் போயிட்டாப்ல..!! சம்மந்தமே இல்லாம கீர்த்தி சுரேஷும் எதுக்கு அங்க போறாங்க.. என்னவா இருக்கும்..!

    திரிஷா லண்டன்ல.. நேத்து CM விஜயும் போயிட்டாப்ல..!! சம்மந்தமே இல்லாம கீர்த்தி சுரேஷும் எதுக்கு அங்க போறாங்க.. என்னவா இருக்கும்..!

    சினிமா
    இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்... விஜய்க்கு எதிராக கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்...!

    இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்... விஜய்க்கு எதிராக கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    விறுவிறு இடைத் தேர்தல்... விடாமல் துரத்தும் திமுக... தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!

    விறுவிறு இடைத் தேர்தல்... விடாமல் துரத்தும் திமுக... தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!

    தமிழ்நாடு
    ‘சர்தார் 2’ விமர்சனம்.. கார்த்தியின் ஸ்பை மிஷன் வென்றதா.!! எஸ்.ஜே. சூர்யாவின் மிரட்டல், சர்தாரின் பிளாஷ்பேக் என எப்படி இருக்கிறது படம்..!

    ‘சர்தார் 2’ விமர்சனம்.. கார்த்தியின் ஸ்பை மிஷன் வென்றதா.!! எஸ்.ஜே. சூர்யாவின் மிரட்டல், சர்தாரின் பிளாஷ்பேக் என எப்படி இருக்கிறது படம்..!

    சினிமா

    செய்திகள்

    பரமக்குடியில் குவிந்த அரசியல் கட்சி தலைவர்கள்... இம்மானுவேல் சேகரனுக்கு அமைச்சர்கள் முதல் உதயநிதி வரை மரியாதை...!

    பரமக்குடியில் குவிந்த அரசியல் கட்சி தலைவர்கள்... இம்மானுவேல் சேகரனுக்கு அமைச்சர்கள் முதல் உதயநிதி வரை மரியாதை...!

    அரசியல்
    இந்திய ஊழியர்களுக்கு ஷாக்.. H-1B விசா புதுப்பிப்பின் 60 நாள் அவகாசம் இனி இல்லையா? அதிரடி காட்டும் டிரம்ப்!!

    இந்திய ஊழியர்களுக்கு ஷாக்.. H-1B விசா புதுப்பிப்பின் 60 நாள் அவகாசம் இனி இல்லையா? அதிரடி காட்டும் டிரம்ப்!!

    உலகம்
    இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்... விஜய்க்கு எதிராக கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்...!

    இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்... விஜய்க்கு எதிராக கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    விறுவிறு இடைத் தேர்தல்... விடாமல் துரத்தும் திமுக... தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!

    விறுவிறு இடைத் தேர்தல்... விடாமல் துரத்தும் திமுக... தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!

    தமிழ்நாடு
    பொது நிறுவனங்களின் குழு தலைவராக விஜயன்பன் கல்லானை நியமனம்..!! பேரவை விதியின் கீழ் முக்கிய முடிவு..!!

    பொது நிறுவனங்களின் குழு தலைவராக விஜயன்பன் கல்லானை நியமனம்..!! பேரவை விதியின் கீழ் முக்கிய முடிவு..!!

    தமிழ்நாடு
    பரந்தூரில் குறைகடத்தி பூங்கா அமைக்க திட்டம்... முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை.!!

    பரந்தூரில் குறைகடத்தி பூங்கா அமைக்க திட்டம்... முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share