அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரனுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு சேகரிக்க அக்கட்சியின்பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் திறந்தவெனில் பிரச்சாரம் மேற்கொண்டார்
அப்போது வி.கே.சசிகலா பேசுகையில், இப்போது நடைபெறும் தேர்தல் கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. மக்களுக்கான தேர்தல். தி.மு.க., அரசு ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. அதற்கு மாத வட்டி ரூ.7ஆயிரம் கோடி ஆகும். மாத வட்டியை கொடுத்து அவர்கள் தமிழக மக்களுக்கு என்ன செய்ய முடியும்? அதனால் தான் இது மக்களுக்கான தேர்தல் என கூறுகிறேன். தி.மு.க., வெற்றி பெற்றால் ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கப்படும் என கூறுகிறது. 5 ஆண்டுக்கு இது போதுமா? எதிரி கட்சி, துரோக கட்சி என்ன கூறுகிறது என்றால் அவர்கள் வெற்றி பெற்றால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிரிட்ஜ் வழங்கப்படும். யூ. 10 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என கூறுகின்றனர் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அவர்கள் அப்பா வீட்டு பணத்தை கொடுக்கவில்லை. கடன் வாங்கி தான் கொடுக்க போகின்றனர்.
15 நாட்களாக நான் பிரசாரம் செய்து வருகிறேன். அப்போது பொதுமக்கள் தண்ணீர் கிடைக்கவில்லை என கூறுகின்றனர். காட்பாடியிலும் இதே நிலைதான். துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சர். தொகுதிக்கு தண்ணீர் கொடுக்க ஏதாவது செய்தாரா என்றால் இல்லை. தமிழ்நாட்டில் மின்சாரம் 500 யூனிட் ஓடுகின்ற வீடுகள் 2 கோடி வீடு ஆகும் ஒவ்வொருவருக்கும் 800 ரூபாய் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதனால் ஆண்டுக்கு ஒரு 20 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. இதை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்?. அதற்கு தான் ஆட்சி மாற்ற வேண்டும் என கூறுகிறேன்.
இதையும் படிங்க: “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்பது உள்பட 60 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். மின்சாரத் துறை, டாஸ்மாக் துறைகளில் உள்ள தவறுகளும் கலைந்தால் ஆட்சி நன்றாக இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு வழங்கப்படும்.சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டத்தை மீறுபவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்.
காட்பாடியில் கூடுதல் ரெயில்வே மேம்பாலம் ரூ.50 கோடியில் கட்டப்படும் என அறிவித்தார்கள் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. காரணம் அதற்கு பணம் இல்லை. மேலும் ஏற்கனவே உள்ள மேம்பாலத்தில் பள்ளத்தை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சிரமைக்கப்பட்ட பிறகு 2 மாதத்தில் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டது. காட்பாடி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சித்தூர் பஸ் நிலையத்தில் கால்வாய் வசதி இல்லாததால் மழை நீர் தேங்குகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து விடுகிறது. பொன்னையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகின்றன. இதற்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. அப்துல்லாபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. ஆனால் அதை பயன்பாட்டுக்கு வரவில்லை.
தாய்மார்களுக்காக ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் பாலூட்டும் அறையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்டிக் கொடுத்தார். ஆனால் தி.மு.க ஆட்சி அதனை மூடிவிட்டது. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தான் பிரச்சினை ஏற்படும் என பேசினார்.
இதையும் படிங்க: விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!