இன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) உலகெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகப் பெண்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகப் பெண்கள் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் வெல்லும் தமிழ்ப் பெண்களாகத் திகழ வேண்டும் எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெல்லும் தமிழ்ப் பெண்களே... நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடல் அரசும் இருக்கிறது எனத் தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் தங்களது முன்னேற்றப் பாதையில் வரும் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும், அவர்களின் ஒவ்வொரு முயற்சியிலும் தமிழக அரசு ஒரு உற்ற நண்பனாக உடனிருக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்யின் மகளிர் தின அறிவிப்பு! பெண்களுக்கு மாதம் ₹2500, ஆண்டுக்கு ₹15,000 தவெக-வின் மெகா தேர்தல் வாக்குறுதிகள்!

பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை இலக்கு என்பதை மீண்டும் ஒருமுறை இந்த மகளிர் தினத்தில் அவர் நினைவுபடுத்தியுள்ளார். அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள் எனத் தனது வாழ்த்தை அவர் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே நேற்று மகளிர் தினப் பரிசாக 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில் ₹5,000 வரவு வைக்கப்பட்ட நிலையில், இன்று முதல்வரின் இந்த உத்வேகமான வாழ்த்துச் செய்தி தமிழகப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!