• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அம்மா விசுவாசி டு அமித் ஷா தளபதி - யார் இந்த நயினார் நாகேந்திரன்?

    பாஜக தலைவர் அண்ணாமலை எந்த நேரமும் பதவி விலகலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அண்ணாமலையை ரிப்ளே செய்ய தென்மாவட்ட தலைவரான நயினார் நாகேந்திரனை தலைவராக்க திட்டமிட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 11 Apr 2025 17:15:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ainar-nagendran-new-face-of-tamil-nadu-bjp-to-take-over-as-state-president

    பாஜக தலைவர் அண்ணாமலை எந்த நேரமும் பதவி விலகலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அண்ணாமலையை ரிப்ளே செய்ய தென்மாவட்ட தலைவரான நயினார் நாகேந்திரனை தலைவராக்க திட்டமிட்டுள்ளது. 

    யார் இந்த நயினார் நாகேந்திரன்? 

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைதீஸ்வரம் என்னும் கிராமம்தான் நந்யினார் நாகேந்திரனுக்கு சொந்த ஊர். 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி பிறந்த நயினார் நாகேந்திரன் சொந்த ஊரிலே பள்ளிப்படிப்பை முடித்து, திருநெல்வேலியில் உள்ள எம்டிடி இந்து கல்லூரியில் இளங்கிலை பட்டம் முடித்தார். தொடர்ந்து ஆரல்வாய் மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார்.

    இதையும் படிங்க: தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? நயினாரை தொடர்ந்து மேலும் ஒருவர் விருப்பமனு; கமலாலயத்தில் குழப்பம்!!

    Nainar Nagendran

    புரட்சி தலைவர் எம்ஜிஆரின் பேச்சுகளும் கொள்கைகளும் நயினார் நாகேந்திரனை இளம் வயதிலேயே சுண்டி இழுக்க எம்ஜிஆர் மறைந்த இரண்டு ஆண்டுகளில் 1989ல் அதிமுகவில் அடிமட்ட தொண்டனாக இணைந்தார். தீவிர ஈடுபாட்டுடன் கட்சிக்குள் இயங்கிய நயினார் அதிமுகாவில் அடுத்தடுத்த பொறுப்புகள் வந்து சேர்ந்தன.

    ஜெயலலிதா விசுவாசி: 

     முதலில் பணக்குடி நகர செயலாளர். அடுத்து ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளர் என்று படிப்படியாக முன்னேறிய நயினாருக்கு முதன்முதலில் 2001 சட்டமன்ற தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. முதல் தேர்தலிலே 42,765 வாக்குகள் வெற்றி பெற்றார். அவருக்கு மின்சாரம் தொழில்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி கொடுத்து , அமைச்சர் அவையில் அமர வைத்தார் ஜெயலலிதா. 

    Nainar Nagendran

    அதை தொடர்ந்து 2006 சட்டமன்ற தேர்தலில் பெறும் 606 வாக்குகள் வித்தியாசத்தில் நெல்லையில் வெற்றியை நழுவவிட்டவர். அடுத்த தேர்தலில் எதிர்பார்த்து காத்திருந்தார். இதனால் 2011 சட்டமன்ற தேர்தலிலும் நெல்லை தொகுதியில் அவரை களமிறக்கினார் ஜெயலலிதா.

    2006ல் நழுவுவிட்ட வெற்றியை 2011ல் பற்றி பிடித்தார் நயினார்  நாகேந்திரன், ஆனால் இந்த முறை அவருக்கு அமைச்சர் அவையில் இடம் கிடைக்கவில்லை. கட்சி பணியை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தவர் 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நெல்லையில் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை வெறும் 601 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அவரை தோற்கடித்தது.  தோல்வியால் தளர்ந்து போனவருக்கு ஜெயலலிதாவின் மரணமும் அதிமுகாவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பமும் அயற்சியை கொடுத்தன.

    பாஜகவில் ஐக்கியம்: 

    Nainar Nagendran

     முக்கிய புள்ளிகள் எல்லோரும் சசிகலா அணி இபிஎஸ் அணி தாவி கொண்டிருக்க நயினார் மட்டும் கட்சி விட்டு கட்சி தாவி பாஜகவில் ஐக்கியமானார். டெல்லி சகவாசம் கிடைத்தாலும் தாய் வீட்டை விட்டு கொடுக்காத நயினார்  முக்கிய மேடைகளில் ஜெயலலிதாவின் புகழ்பாட மறப்பதில்லை. ஒருமுறை பாஜகவின் மேடையில் ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி புல்லரிக்க பேசியவர் தான் கட்சியை விட்டு வெளியே வந்த கதை தெரிய வேண்டுமானால் அண்ணன் எடப்பாடியிடம் கேளுங்கள் என பொடிவைத்து முடித்தார். பாஜகவுக்கு சென்றதும் அவரது  இந்துத்துவ பக்தியாகஆண்டாள் பத்தி பேசிய  வைரமுத்திவின் நாக்கிற்கு 10 கோடி ரூபாய் விலைவைத்தார் இதனால் அவரது முகம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார்.

    பாஜக எம்.எல்.ஏ டு எம்.பி. ஆசை: 

     சர்ச்சையோடு சர்ச்சையாக நெல்லை தொகுதியில் ஆக்டிவாக வளம் வந்தவருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது 2021ல் அமைந்த அதிமுகா பாஜாகா கூட்டணி. மீண்டும் நெல்லையில் களமிறங்கியவர் 23107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்குள் பாஜக உறுப்பினராக நுழைந்தார். சீனியர் என்ற முறையில் அவருக்கு பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் பதவியை வழங்கியது தலைஅமை. முஸ்லிம்கள் எதிர்த்த சிஐஏ தொடங்கி தமிழர்கள் எதிர்த்த நீட் வரை மத்திய அரசு திட்டங்களின் ப்ரமோட்டராக சட்டமன்றத்தில் ஆதரவு கொடுத்தார்.

    Nainar Nagendran

    ஆளுநர் - தமிழ்நாடு அரசு மோதல் விவகாரத்தில் ஆளுநருக்கான ஆதரவு குடல் எழுப்பினார். என்னதான் எம்எல்ஏவாக வலம் வந்தாலும் எம்பியாக நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்கிற ஆசை நயினாரின் மனதிற்குள் ஆழமாக எழ,  தன்னை பலமுறை எம்எல்ஏவாக்கி அழகு பார்த்த தனக்கு சாதகமான நெல்லை மக்களவை தொகுதியை கைப்பற்ற மறைமுகமாக காய்களை நகர்த்தினார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரத்தையும் தொடங்கினார் எம்எல்ஏவுக்கு எம்பி ஆசை எட்டிப்பார்க்கிறது என்று பாஜகவிற்குள் எதிர்ப்பு குரல்கள் கிளப்பியது.

     அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய சசிகலா புஷ்பா ஆளுநர் பதவியை எந்த நேரமும் கைவிட தயாராக இருந்த தமிழிசை சொந்த கட்சியை பாஜாகாவுடன் இணைத்துவிட்ட சரத்குமார் என பலரும் நெல்லையை குறிவைத்திருந்த சூழலிலும் 2024 மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு நயினார் நாகேந்திரனுக்கே வந்து சேர்ந்தது. இருப்பினும் சொந்த கட்சிக்குள் எதிர்ப்புகளையும் மீறி வாய்ப்பை தட்டி பறித்தவரை நெல்லை தொகுதி கைவிட மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகவே தனது பணியை தொடர்ந்து வருகிறார். 

    அமித் ஷா தளபதி: 

    இந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக ஆதிமுகாவுடன் மீண்டும் கைகோர்க்க தயாராகி வரும் பாஜகவிற்குள் நயினார் நாகேந்திரன் இன்னொரு ஜாக்பாட்டாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லி சென்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இதனால் பாஜக அதிமுக கூட்டணி உறுதியாகிறதா? என்கிற கேள்வியோடு இன்னொரு முக்கியமான கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என அண்ணாமலை கூறியிருந்ததால், அடுத்த தலைவர் யார் என துருவ தொடங்கின மீடியாக்கள். 

    Nainar Nagendran

    அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமியும் கொங்கு பகுதியின் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தென் தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான சமூகத்தை குறிவைக்க பாஜக முடிவு செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின. அப்படி ஒரு நபரை பாஜக தேடி கொண்டிருக்க முன்னாள் அதிமுக தொண்டர், ஜெயலலிதாவின் புகழ்பாடும் விசுவாசி, அதிமுகவினருடன் இணக்கமாக பயணிக்கும் அரசியல்வாதி என அத்தனை பாக்ஸ்களையும் பிக் செய்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். இவரது செயல்பாடு தமிழக பாஜகவில் எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

    இதையும் படிங்க: தமிழக பாஜகவின் புதிய தலைவர் தேர்வு... அண்ணாமலையின் பெயர்- புகைப்படங்கள் நீக்கம்..!

    மேலும் படிங்க
    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share