• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘மனிதநேயமற்ற, உணர்வற்ற செயல்’: பலாத்கார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

    பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் பலாத்காரத்தில் சேராது என்று தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
    Author By Pothyraj Wed, 26 Mar 2025 14:39:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    allahabad-high-court-judgement-cancelled-by-supreme-cou

    பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பதும், பைஜாமை கீழே கழற்றுவதும் பாலியல் பலாத்காரத்தில் சேராது என்று தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு மனிதநேயற்ற, சட்டத்தின் கூறுகள் குறித்து தெரியாத உணர்வற்ற செயல் என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கடந்த 17ம்தேதி போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த ஒருவர் தன்மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் தனிநீதிபதி ராம் மனோகர் நாராயன் மிஸ்ரா கடந்த 17ம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவே, நீதிபதி ஜார்ஜ் மாஷ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்து (26ம்தேதி)இன்று விசாரணைக்கு எடுத்தனர். 

    Allahabad High Court

    உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.காவே கூறுகையில் “ அலகாபாத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி ராம் மனோகர் நாராயண் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் உணர்ச்சியற்றவை, மனிதாபிமானமற்றவை மற்றும் சட்டத்தின் கோட்பாடுகளே தெரியாமல் தெரிவித்தவை.

    இதையும் படிங்க: சர்ச்சையான ‘மார்பகத்தை பிடிப்பது பலாத்காரமில்லை’ தீர்ப்பு.. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்..!

    குற்றம் சாட்டப்பட்ட இருவராலும் பாதிக்கப்பட்ட சிறுமி அனுபவித்த அதிர்ச்சியை விவரிக்கும் சில கூறுகள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் செயல்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய நோக்கில் இல்லை என்று கூறியிருப்பது என்பது நீதிபதி முற்றிலுமாக உணர்திறன் இல்லாமல் இருந்தார் என்பதை காட்டுகிறது.
    இந்த வழக்கில் தீர்ப்பு உடனுக்குடன் அளிக்கப்படவில்லை என்பது வழக்கின் மோசமான பகுதி. கடந்த 2024 நவம்பரில் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதன்பின் மார்ச் 17ம் தேதிதான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட 4 மாதங்களுக்குப்பின், நீதிபதியின் கூற்றுப்படி, வழக்கின் உண்மைகளை நன்கு ஆய்வு செய்து பரிசீலித்து வழங்கப்பட்டதா. 

    Allahabad High Court

    குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மார்பகங்களைப் பிடித்து, அவரது பைஜாமாவின் கயிற்றைப் பிரித்து, ஒரு பாலத்தின் கீழ் இழுத்துச் செல்ல முயன்றதைக் குறிப்பிடும் 3 பத்திகள் மிகவும்  அருவருப்பானதாக உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. 

    இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசு ஆகிய இரண்டுக்கும் சம்மன் அனுப்பி பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். மேலும், உச்ச நீதிமன்ற பதிவாளர் இந்தத் தீர்ப்பை உடனடியாக அலகாபாத் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி, தலைமை நீதிபதிக்கு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுகிறோம். அலகாபாதா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைக்கிறோம்.” இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

    வழக்கின் முன்னூட்டம்!

    2021ம் ஆண்டில் சாலையில் நின்றிருந்த ஒரு சிறுமிக்கு பவான், ஆகாஷ் ஆகியோர்  காரில் லிப்ட் அளித்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, பாலத்துக்கு அடியில் இழுத்துச் சென்றனர். இந்த சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவரவே இருவரும் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுமியின் உறவினர் அளித்த புகாரில் போலீஸார் பவான், ஆகாஷ் இருவரையும் கைது போலீஸார் செய்தனர். அவர்கள் மீது ஐபிசி பிரிவு 376 பாலியல் பலாத்காரம், போக்ஸோ சட்டத்தில் பிரிவு18ன் கீழ் சிறுமியை பலாத்கார முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மனு செய்து தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யவும், பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் கோரினர். இந்த மனுவை நீதிபதி ராம் மனோகர் நாராயன் மிஸ்ரா விசாரித்து கடந்த 17ம் தேதி உத்தரவுகளைப் பிறப்பித்தார் அதில் “குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சிதான். அதாவது பலாத்காரம் செய்வதற்கான தயாரிப்பு நிலைக்குதான் குற்றச்சாட்டப்பட்டவர்கள் சென்றனர். ஒரு குற்றத்தைச் செய்வதற்கான தயாரிப்புக்கும், உண்மையான முயற்சிக்கும் உள்ள வேறுபாடு அதிக அளவிலான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது. 

    Allahabad High Court

    குற்றம்சாட்டப்பட்ட ஆகாஷ் அந்த சிறுமியை பாலத்துக்கு கீழே கொண்டு சென்று அவரின் பைஜாமை கிழித்து உள்ளாடையே இறக்கியுள்ளார். இதை எந்த சாட்சியும் பார்க்கவில்லை, இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை, ஆடைகள் கழற்றப்படவில்லை. ஆதலால், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் என்ற குற்றச்சாட்டு பொருந்தாது, குற்றம்சாட்டப்பட்டவரும் பாலியல் பலாத்கார முயற்சியும் செய்யவில்லை.

    சிறுமியின் மார்பகங்களை பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது, பாலத்துக்கு அடியில் இழுத்துச் செல்வதெல்லாம் பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது. ஆதலால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பிரிவை ரத்து செய்து அதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரை ஐபிசி பிரிவு 354 (பி) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10  ஆகியவற்றின் கீழ் விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளித்தார்.

    இதையும் படிங்க: டெல்லி நீதிபதி அளித்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்யுங்கள்.. அலாகாபாத் வழக்கறிஞர்கள் போராட்டம்..!

    மேலும் படிங்க
    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share