மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் வேளையில், தற்போது அஜர்பைஜான் நாட்டின் மீது ஈரான் திடீர் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட தற்கொலைப்படை ட்ரோன்கள் அஜர்பைஜானின் எல்லைப் பகுதியான நக்சிவன் (Nakhchivan) பகுதியில் விழுந்து வெடித்ததால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அஜர்பைஜானின் நக்சிவன் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் விமான நிலையப் பகுதியில் விழுந்து வெடித்ததில் அங்கிருந்த கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ராணுவ நிலைகள் மட்டுமின்றி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீதும் ட்ரோன்கள் விழுந்து வெடித்துள்ளன. இந்தத் தாக்குதலில் முதற்கட்டமாக 2 பேர் படுகாயமடைந்துள்ளதாக அஜர்பைஜான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் இந்த அத்துமீறியத் தாக்குதலுக்கு அஜர்பைஜான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானிய ட்ரோன்கள் தங்கள் வான்பரப்பிற்குள் நுழைந்ததை அடுத்து, நக்சிவன் பகுதியில் பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலுடன் நெருங்கிய உறவு கொண்ட அஜர்பைஜான், ஈரானுக்கு எதிரானத் தாக்குதல்களுக்குத் தனது தளங்களை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற அச்சத்தில் ஈரான் இந்த எச்சரிக்கைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஹிரோஷிமா குண்டை விட 20 மடங்கு பவர்! அமெரிக்கா நடத்திய 'மினிட்மேன் III' ஏவுகணை சோதனை!
இந்தத் திடீர் தாக்குதலால் காஸ்பியன் கடல் பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற அண்டை நாடுகள் இந்த மோதலைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஈரான் கப்பல் மீது அட்டாக்..!! இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??