நியூசிலாந்தின் தவுரங்கா நகரில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று பிறந்தவர் கேன் வில்லியம்சன். விளையாட்டு ரத்தம் கொண்ட குடும்பத்தில் வளர்ந்த இவர், தந்தை பிரெட் கிளப் கிரிக்கெட் விளையாடியவர், தாய் சாண்ட்ரா பாஸ்கெட்ட்பால் வீராங்கனை, மூன்று சகோதரிகள் வாலிபால் இல் சாதனை புரிந்தவர்கள் என்பதால், விளையாட்டின் மணம் இவரது வாழ்க்கையின் அடிப்படையாக இருந்தது.
தவுரங்கா பாய்ஸ் காலேஜ் தொடக்கப் பள்ளியில் படித்த இவர், இளம் வயதிலேயே கிரிக்கெட்டின் மாயத்தை உணர்ந்தார். பள்ளி காலத்தில் 40 சதங்களை அடைந்த இவர், 2007 டிசம்பரில் பள்ளி மாணவராகவே பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவரது பயிற்சியாளர் பேசி டெபினா, இவரது உழைப்பையும், மற்றவர்களை பாதிக்காமல் சாதனை புரியும் தன்மையையும் பாராட்டினார்.

2008 இல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக திகழ்ந்து, அரை இறுதிக்கு அணியை அழைத்த சென்றார்.கேன் வில்லியம்சனின் சர்வதேச கிரிக்கெட் பயணம் 2010 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தியாவுக்கு எதிரான முதல் ODIயில் அறிமுகமானாலும், முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் டக் அவுட் ஆகி ஏமாற்றத்தை தாங்கினார். ஆனால், பாங்கலாதேஷுக்கு எதிரான முதல் ODI சதத்துடன் திரும்பி வந்து, நியூசிலாந்தின் மிக இளம் ODI சதம் அடைந்த வீரராக பதிவானார். டெஸ்ட் அறிமுகம் 2010 நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றபோது, 131 ரன்கள் அடித்து டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடைந்த எட்டாவது நியூசிலாந்து வீரரானார்.
இதையும் படிங்க: #SIR...! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்... 21 கட்சிகள் புறக்கணிப்பு...!
இந்த சாதனை, இவரது திறமையின் தொடக்கமாக இருந்தது. இதுவரை 93 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன் 2 ஆயிரத்து 575 ரன்களை குவித்துள்ளார். இதனிடையே, நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆரியர் ஜெயலலிதா அதிமுக தலைவர் ஆனது எப்படி? உதயநிதி காலில் விழுவது தான் சுயமரியாதையா?... வெளுத்து வாங்கிய சீமான்...!