• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக இல்ல அமித்ஷா திமுக... எடப்பாடி பழனிசாமியை விளாசிய கனிமொழி...!

    அமித்ஷா மனது வைத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக அனுப்ப முடியும்
    Author By Amaravathi Tue, 14 Apr 2026 20:45:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi slams ADMK Leader EPS

    தேர்தலுக்குப் பிறகு, அமித்ஷா விரும்பினால் அதிமுக அமித்ஷா திமுக”வாக மாறிவிடும் நிலை உருவாகலாம் -பின்னர் அமித்ஷா மனது வைத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக அனுப்ப முடியும் - கனிமொழி எம்பி பேச்சு


    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மார்கண்டேயனை ஆதரித்து, விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் எம்பி கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் 

    அப்போது அவர் பேசுகையில் : திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கும்போது, உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்திருக்கிறோம் என்ற உரிமையுடன் வந்து வாக்கு கேட்கிறோம். வேறு யாரும் இதைச் சொல்ல முடியாது. ஏனெனில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமே.

    இதையும் படிங்க: இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    அதிமுக ஏதாவது நிறைவேற்றியிருக்கிறார்களா? இல்லை. 2016ஆம் ஆண்டின் அதிமுக தேர்தல் அறிக்கையில், 27ஆம் பக்கத்தில் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்குவோம் என்று கூறியிருந்தார்கள்.

    அந்த செல்போனை பெற்றவர்கள் இந்தக் கூட்டத்தில் யாராவது இருக்கிறீர்களா? ஒருவராவது இருக்கிறீர்களா? வாங்கியவர்களை யாராவது அறிவீர்களா? தமிழ்நாடு முழுவதும் கேட்கிறேன் யாருக்கும் தெரியவில்லை. இதுதான் அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் லட்சணம்.

    தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் நிறைவேற்றாமல், எடப்பாடி பழனிசாமி சுற்றி வந்து எனக்கு ஓட்டு போடுங்கள்” என்றால், எதற்காக மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்?

    அவர் சொல்கிறார் நான் ஒன்றிய அரசாங்கத்துடன் இணக்கமாக இருந்து திட்டங்களை கொண்டு வந்தேன்” என்று. என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள்? ஒன்றும் கொண்டு வரவில்லை.

    நீட் தேர்வை கொண்டு வந்து பல பிள்ளைகள் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையை உருவாக்கினீர்கள். அதையும் தாண்டி, உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டு, இன்று மின்கட்டணம் உயர்ந்து கொண்டே போவதற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது, அதை மௌனமாக ஏற்றுக்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோதும், அதற்கு எதிர்த்து பேசாமல் இருந்தார்.

    என்னை காப்பாற்றினால் போதும், என்மீது வழக்குகள் பதிவு செய்யாமல் இருந்தால் போதும்; யார் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று நினைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.

    ஆனால், தமிழ்நாடு இன்று அனைத்து துறைகளிலும் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிக அளவில் தொழில்முதலீடுகள் வரக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மாநிலமும் தமிழ்நாடுதான்.

    வேலைவாய்ப்புகளை அதிக அளவில் வழங்கிக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. அதேபோல், தனிநபர் வருமானம் மிக அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றும் தமிழ்நாடுதான்.

    உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வந்து முதலீடு செய்ய முன்வரும் மாநிலம் தமிழ்நாடு. இவை அனைத்தும், ஒன்றிய அரசு நமக்கு எதிராக இருக்கும் நிலையிலும் சாதித்து காட்டிய முதலமைச்சரின் சாதனைகள்.

    ஆனால், திரும்பத் திரும்ப நம்மை எதிர்த்து ஒரே விஷயத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அது ஒரு பொய். ஏனெனில், நம்மை எதிர்த்து சொல்லுவதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை.

    பாஜக பொய்களை நன்றாகச் சொல்ல கற்றுக் கொடுக்கிறது. “வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி” நடத்துகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதை கற்றுக் கொண்டு, எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் தமிழ்நாட்டில் அமைதி இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறுகின்றனர். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்று நான் பெருமையுடன் சொல்லுவேன்.

    பெண்களுக்கான உரிமைத்தொகையை வழங்கிய ஆட்சி நம்முடைய ஆட்சி. அடுத்ததாக நம்முடைய ஆட்சி மீண்டும் வந்தவுடன், அந்தத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பெண்களுக்காக இத்தனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நம்மைப் பார்த்து, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

    நான் ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன் நம்மை எதிர்த்து பேசக்கூடிய பாஜக, அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் மாநிலங்களில் நிலைமை என்ன? பெண்களுக்கு எதிராக ஒரு குற்றமும் நடைபெறக்கூடாது. ஒரு குற்றம் நடந்தால்கூட அது தவறுதான், நடக்கவே கூடாது.

    ஆனால், அவர்கள் கூட்டணியில் உள்ள பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், 2023ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை: உத்தரப் பிரதேசத்தில் 66,381, மகாராஷ்டிராவில் 47,101, ராஜஸ்தானில் 45,450, மத்தியப் பிரதேசத்தில் 32,342, தமிழ்நாட்டில் 8,943. இது எங்கும் இருக்கக்கூடாத ஒன்றுதான். ஆனால், இந்நிலையிலும் நீங்கள் இங்கே வந்து எங்களை குற்றம் சாட்டும் அருகதை உங்களுக்கு இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    ஆனால், இவர்கள் கூட்டணியில் உள்ள பாஜக ஆட்சி நடைபெறும் இந்த நாட்டில், பல மாநிலங்களில் 70 சதவீதம் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை. இதுதான் இன்று நிலவும் உண்மை.

    இவர்கள் நம்மைப் பார்த்து தேர்தலுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதைவிட, ஒவ்வொரு முறையும் நம்மைப் பார்த்து குற்றம் சாட்டும் அந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமி ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    பொள்ளாச்சியில் நடைபெற்ற குற்றங்களில், அங்கு குற்றம் செய்தவர்களை காப்பாற்றத் துடித்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், நம்முடைய முதலமைச்சர் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுடைய பக்கம் நின்று ஒவ்வொரு முறையும் நியாயத்தை வழங்கியவர் நம்முடைய முதலமைச்சர்.

    எதிர்க்கட்சியில் இருக்கும் பழனிசாமி அவர்கள், நாம் சில விமர்சனங்களை முன்வைத்தால் வருத்தப்படுகிறார். அவர் யாருடைய காலில் விழுகிறார் என்பதற்காக நமக்கு எந்த வருத்தமும் இல்லை.யாருடைய காலில் வேண்டுமானாலும் விழட்டும் யாரிடமும் வேண்டுமானாலும் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளட்டும். அதைப் பற்றி நமக்கு எந்த அக்கறையும் இல்லை.

    நீங்கள் யாருடைய காலில் விழுகிறீர்களோ, அந்தக் கால் பாதுகாப்பாக இல்லை, அதுதான் எங்களின் கவலை. காலில் விழுந்தவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும் அதைத்தான் சொல்ல வருகிறோம்.

    அம்மையார் சசிகலாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று முதலமைச்சராக ஆனீர்கள். அவர்தான் உங்களை முதலமைச்சராக ஆக்கினார் இன்று அவர்கள் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள்? அதிமுகவில் இருக்கிறார்களா?
    அதிமுக அலுவலகத்திற்கே வர முடியுமா?

    இவருக்கு முன்னர், முதலமைச்சராக அம்மையார் ஜெயலலிதா அவர்கள் நியமித்த ஓ.பி.எஸ். அவர்கள் இன்று எங்கே இருக்கிறார்? நம்மோடு இருக்கிறார். தமிழ்நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய அண்ணன் தளபதி அவர்கள்” என்று கூறி, நம்மோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்

    தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர் இவரை நம்பினால் கைவிடப்படுவோம் என்று. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி.

    இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு ஒரு சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும். ஏனெனில் இந்தத் தேர்தலுக்குப் பிறகு, அமித்ஷா அவர்கள் விரும்பினால், கட்சியே கிட்டத்தட்ட அண்ணா திமுகவிலிருந்து அமித்ஷா திமுக”வாக மாறிவிடும் நிலை உருவாகலாம்.

    அதனால் அமித்ஷா அவர்கள் மனது வைத்தால், அவரை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக அனுப்பவும் முடியும். அவருக்கு பிடித்த மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளட்டும் அங்கு போகலாம் என கூறினார்.

    இதையும் படிங்க: “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    மேலும் படிங்க
    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி

    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி' பட விழாவில் பார்த்திபன் பேச்சால் ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    சினிமா
    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த

    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த 'கருப்பு' படம்..!!

    சினிமா
    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    சினிமா
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share