• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “சின்னப்பையன் சீமான்.... இனி உனக்கு ஒரு பையன் ஓட்டு போடமாட்டான்...”  - நாதகவை நாறுநாறாக கிழித்த நாஞ்சில் சம்பத்....!

    தேமுதிகவை திமுகவுக்கு குறைந்த விலையில் விற்று விட்டனர். நடிகர் கமலஹாசன் டார்ச் லைட்டை தொலைத்துவிட்டு அறிவாலயத்தில் தேடி வருகிறார். 
    Author By Amaravathi Mon, 02 Mar 2026 13:22:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk nanjil sampath slams Seeman

    புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  அக்கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நாஞ்சில் சம்பத், ராஜ்மோகன், லயோலா மணி ஆகியோர்  பங்கேற்றனர்.

    இதன்பினர் பேசிய நாஞ்சில் சம்பத்: ஒரே நேரத்தில் இரண்டு வல்லாதிக்க சக்திகளை எதிர்க்கின்ற பேராலுமே தவெக தலைவர் விஜய்க்கு மட்டும் தான் இருக்கிறது. அதனால்தான் அனைவரும் பயப்படுகின்றனர். மாணவர்கள் இளைஞர்கள் தாய்மார்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். புதுக்கோட்டை தஞ்சாவூர் பெரம்பலூர் அரியலூர் ராமநாதபுரம் இத்தனை மாவட்டத்தில் இருக்கின்ற பெரும்பான்மை சமூக வாக்குகள் அனைத்தும் தவெகவுக்கு உறுதி செய்து விட்டனர்.  திருவள்ளுவர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம்  தூத்தூர் வரைக்கும் இருக்கின்ற கடலாடும் மீனவர்கள் வாக்கு அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒரு கட்சிக்கு விழுகிறது என்றால் அது தவெகவுக்கு தான்.  கல்லூரி மாணவர்கள் அனைவரும் தவெகவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர. 

    18-19 வயதுள்ள 12.5 லட்சம் வாக்காளர்கள் தவெகவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். திமுகவுக்கு எங்கே ஓட்டு இருக்கிறது. திமுக பழைய பெருங்காய டப்பா அதில் ஒரு புண்ணாக்கும் கிடையாது. அந்தக் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது  கல்லறைக்கு போய்க் கொண்டிருக்கிறது. அதை தடுக்க ஸ்டாலினால் முடியவில்லை. உதயநிதியின் நியமனமும் உதயநிதியின் அத்துமீறலும் திமுக நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. உதயநிதி ஆற்றல் உள்ளவரா. ஒருமுறை மாநில சுயாட்சியை பற்றி அவரை பேச சொல்லுங்கள். ஒரு நாள் இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை விமர்சிக்க சொல்லுங்கள். ஒரு மணி நேரம் இந்தியாவின் வெளியுறவு கொள்கை தோல்வி என்று பேச சொல்லுங்கள் எதுவும் தெரியாது. எதுவும் தெரியாத ஒரு ஞான சூனியத்தை கொண்டு போய் அண்ணா உருவாக்கிய அருமை இயக்கத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் ஆனால் எங்களுக்கு கொள்கை இல்லை என்று சொல்கிறீர்கள். 

    இதையும் படிங்க: இழப்பை ஏளனம் செய்வதா? நயினார் மன்னிப்பு கேட்கணும்... நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்..!

    பிறப்புக்கும் எல்லாம் உயிருக்கும் என்பது திருக்குறள் என்பது தமிழ்நாட்டில் பல பேருக்கு தெரியாது. பிறப்புக்கும் எல்லாம் உயிருக்கும் என்பதை ஒரு கோடி இளைஞர்கள் திரும்பத் திரும்ப உச்சரிக்கின்ற அதிசயத்தை எங்கள் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறார் எங்களுக்காக கொள்கை இல்லை. 

    இருமொழிக் கொள்கைதான் எங்களின் கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதி எங்கள் கொள்கை போதையில்லா தமிழகம் எங்கள் கொள்கை. நாங்கள் உரக்க எங்களது கொள்கையை சொல்லியுள்ளோம் நீங்கள் உங்கள் கொள்கையை சொல்லுங்கள். கொள்ளையடிப்பதை தவிர வேறு ஏதாவது கொள்கை இருக்கிறதா. 

    ஒரே நாளில் ஒரே அமைச்சர் 888 கோடி ரூபாய் வாங்குகிறார். எங்களுக்கு போட்டியா கூட்டம் நடத்தினால்... திருவண்ணாமலையில் வடக்கு இளைஞர் அணி மண்டலம் மாநாடு. ஒரு லட்சத்து 35,000 நாற்காலிகள். ஒரு பிளாஸ்டிக் மார்க்கெட்டில் ஒரு பாட்டில் தண்ணீர் ஒரு பாட்டில் ஜூஸ்    உள்ளிட்ட சிற்றுண்டிகள் வைத்தனர். முதலமைச்சர் பேசும்போது அந்த சிற்றுண்டிகள் தான் உண்டனர் யாரும் முதலமைச்சரின் பேச்சைக் கேட்கவில்லை. பேச்சு முடிந்ததற்கு பிறகு அவருக்கு வெள்ளி நாற்காலி போடுகின்றனர். 

    ஆயிரம் ரூபாய் கொடுத்து வெள்ளி மூக்குத்தி வாங்கக்கூடிய தகுதியே இல்லாமல் 10 லட்சம் பெண்கள் இருக்கின்றனர். ஸ்டாலின் 50 ஆண்டுகாலம் அனுபவம் உள்ளவர் என்பதால் அதில் உட்கார மாட்டார் என்று நினைத்தேன் ஆனால் அவர் உட்கார்ந்து விட்டார்.  அன்றே நாட்குறிப்பில் எழுதினேன் வெள்ளி நாற்காலியில் உட்கார்ந்து விட்டாய் அன்றே முதலமைச்சர் நாற்காலி நகர தொடங்கிவிட்டது என்று இவ்வளவு ஆடம்பரமா. 

    இந்தியா முழுவதும் இருக்கின்ற மாநிலங்களை பஞ்சாயத்து ஆக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. பாஜக அதற்கு எதிர்த்து திமுக குரல் கொடுத்ததா.  பாஜக அல்லாத முதலமைச்சர் கூட்டத்தை கூட்டினீர்களா இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது.  பாஜக இந்திய அரசியலமைப்புச் சட்டமே இருக்கக் கூடாது என்று நினைக்கிறது. இது அனைத்தும் ஆர் எஸ் எஸ் அஜந்தா ‌. இன்று இஸ்லாமியர்களுக்கு ஆபத்து இருக்கிறது அச்சத்தின் மடியில் உரைந்திருக்கின்றனர். 

    முத்தலாக் சட்டம் சரியத் சட்டத்தில் கை வைக்க மோடிக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அதில் திருத்தம் கொண்டு வர மோடி யார். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்த சட்டத்தில் கை வைக்க அதிகாரம் தந்தது யார்.  தேசிய புலனாய்வு முகமை இஸ்லாமிய வீட்டில் நுழைந்து பயங்கரவாதி என்று  முத்திரை குத்துகிறது

    எனது அனுமதி இல்லாமல் தேசிய புலனாய்வு முகமை தமிழ்நாட்டில்  நுழையக்கூடாது என்று சொல்லுகின்ற துணிச்சல் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு இருக்கிறதா.  குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முன்னோட்டம் தான் எஸ் ஐ ஆர் இதை சொல்வீர்களா. இதை சொல்ல மாட்டீர்கள் உங்களுக்கு வருகின்ற தேர்தலில் வெற்றி அடைய வேண்டும். அனைத்து அமைச்சரும் கொள்ளையடித்து வைத்துள்ளார்கள். 

    ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் செலவு செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். அவ்வளவு பணம் இருக்கின்றது. 40 கோடி ரூபாய்க்கு சாலை அமைக்க காண்ட்ராக்ட் எடுத்தால் அந்த காண்ட்ராக்டர் ஒரு கோடிக்கு 40 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும். 40% கவர்மெண்ட் இது. இதை இல்லை என்று மறுக்க முடியுமா. 

    ஒரு அலுவலக ஊழியர் பதவிக்கு 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை பணம் கேட்கிறார்கள். ஒரு கணவனை இழந்த விதவை ஒ ஏ போஸ்ட் கேட்பதற்கு 10 லட்சம் ரூபாயை ஒரு மந்திரி கேட்கிறார் இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை.  ஊழலற்ற நிர்வாகம் என்று சொல்லுகின்ற விஜயின் குரலுக்கு தமிழ்நாட்டில் ஏழு சதவீத மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். 

    ஒரு படத்திற்கு 300 கோடி வாங்கினவர் அந்த அதை விட்டு விட்டு வந்துள்ளார். விஜய் படம் வந்தாலே உறக்கம் வரவில்லை. அவர் படம் வருவதற்கு போட்டியாக பராசக்தியை கொண்டு வருகின்றீர்கள். பராசக்தி பாராசக்தியாக ஆகிவிட்டது. அந்தப் படத்தை யாரும் பார்க்கவில்லை வளர்ந்து வந்த நட்சத்திரம் சிவகார்த்திகேயன் பலியாகிவிட்டார். வடிவேலு மாதிரி என்னையும் ஆக்கிவிட்டனர் என்று அவர் புலம்புகிறார்.  யார் பொன்னாக மின்னினாலும் யார் பூவாக மலர்ந்தாலும் கோபாலபுரம் குடும்பம் யாரையும் அங்கீகரிக்காது. 

    தேமுதிகவை திமுகவுக்கு குறைந்த விலையில் விற்று விட்டனர். நடிகர் கமலஹாசன் டார்ச் லைட்டை தொலைத்துவிட்டு அறிவாலயத்தில் தேடி வருகிறார்.  நாம் தமிழர் கட்சி எட்டு சதவீத ஓட்டாக இருந்து ஒரு சதவீதம் குட்டிச்சோர் ஆகிவிட்டது. தமிழின விரோத போக்கை மட்டுமே செய்தார். பிரபாகரனோடு தொடர்பு இருக்கிறது என்று பொய் சொன்னார். இதுவரைக்கும் இந்த பொய்யை நாட்டு மக்கள் நம்பி இருந்தனர் பிரபாகரனுக்கும் சின்னப் பையன் சீமானுக்கும் சம்பந்தமே கிடையாது. விடுதலைப்புலிகளின் தோழமைக் கழகத்தை தமிழ்நாட்டில் நடத்தியவர் நான். நியூயார்க்கில் நடந்த தமிழில அரசியலில் பேசியவன் நான். 

    அதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன் நான். இதை நான் எங்கேயும் பேசியது கிடையாது ஒரு துரும்பை கூட தூக்கி போடாத கவ்வோதி. பிரபாகரனோடு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று பொய் சொன்னார். தமிழர்களை எய்த்தார். தமிழீழ விடுதலையை கொச்சைப்படுத்தினார். பிரபாகரனை காட்டிக் கொடுத்தார். தமிழ்நாட்டு மக்கள் அவரை உதறிவிட்டனர் தற்போது மக்கள் இல்லை அதனால் மலைகளுக்கு மாநாடு நடத்துகிறார். காட்டுக்கு மாநாடு கடலுக்கு மாநாடு. உனக்கு இனி மலையும் கடலும் போடுமே தவிர தமிழ்நாடு மக்கள் போட மாட்டார்கள். 

    தலைவர் விஜய் எந்த ஊருக்கெல்லாம் போகிறாரோ அந்த ஊரில் எல்லாம் நாம் தமிழர் கட்சி அடக்கம் ஆகிவிடுகிறது.  தமிழ்நாட்டில் மக்களுக்கு கடைசி நம்பிக்கை தலைவர் விஜய். அவரால்தான் சீர்திருத்தம் செய்ய முடியும். அரசாங்க உத்தரவை விட விஜய் போடுகின்ற உத்தரவுக்கு மரியாதை அதிகம். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று வைகோ ஸ்டாலின் எடப்பாடிக்கு நினைவு வந்தால் பேசுகிறார். 

    கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ஒரு நாள் சொன்னார். இங்கே அதிரவில்லை இலங்கையில் அதிர்கிறது. இலங்கை வெளியுறவுத்துறை கச்சை தீவை பற்றி விஜய் பேசலாமா என்று அவன் கேட்கிறான் என்றால் விஜய் பேச ஆரம்பித்தால் இலங்கையில் கூட பூகம்பம் வெடிக்கிறது.  எந்த ஒரு கட்சியும் பெண் தலைவரை கொள்கை தலைவராக வைத்துக் கொள்ளவில்லை வேலுநாச்சியாரை கொள்கை தலைவராக வைத்துள்ள கட்சி தவெக. 234 தொகுதியில் 117  சரிபாதியாக பெண்களுக்கு வாய்ப்பு என்று சொல்வார்.

    இதையும் படிங்க: திரிஷா பற்றி நைனாரின் அநாகரிக விமர்சனம்... அடிப்படை அறிவை இழந்துவிட்டார்.. நாஞ்சில் சம்பத் கண்டனம்..!

    மேலும் படிங்க
    சமீபத்திய அரசியல் கூத்துகளை வெளிச்சம் போட்டு காட்டிய "TN2026"..! படம் எப்படி இருக்கு.. திரைவிமர்சனம் இதோ..!

    சமீபத்திய அரசியல் கூத்துகளை வெளிச்சம் போட்டு காட்டிய "TN2026"..! படம் எப்படி இருக்கு.. திரைவிமர்சனம் இதோ..!

    சினிமா
    “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை  கலாய்த்த செந்தில் பாலாஜி...!

    “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு
    ரஜினிகூட நடிக்க முடியாது..! ஜெயிலர்-2ல் இருந்து விலகிய ஷாருக் கான்.. பதிலாக நெல்சன் இறக்கிய உச்சநட்சத்திரம்..!

    ரஜினிகூட நடிக்க முடியாது..! ஜெயிலர்-2ல் இருந்து விலகிய ஷாருக் கான்.. பதிலாக நெல்சன் இறக்கிய உச்சநட்சத்திரம்..!

    சினிமா
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் லீக் கஷ்டம் தான்..! ஆனா விஜய் ரியாக்ஷன் என்ன தெரியுமா..? செய்தியாளர் கேள்விக்கு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

    ஜனநாயகன் லீக் கஷ்டம் தான்..! ஆனா விஜய் ரியாக்ஷன் என்ன தெரியுமா..? செய்தியாளர் கேள்விக்கு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை  கலாய்த்த செந்தில் பாலாஜி...!

    “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!

    தமிழ்நாடு
    கடும் வார்த்தை போர்..!! ஒரே ஃபிளைட்டில் பறக்கும் உதயநிதி - இபிஎஸ்..!! பின்னணி என்ன..??

    கடும் வார்த்தை போர்..!! ஒரே ஃபிளைட்டில் பறக்கும் உதயநிதி - இபிஎஸ்..!! பின்னணி என்ன..??

    தமிழ்நாடு
    சட்டமன்ற தேர்தல்..! பணப்பட்டுவாடா.. அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதகவினர்..!!

    சட்டமன்ற தேர்தல்..! பணப்பட்டுவாடா.. அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதகவினர்..!!

    தமிழ்நாடு
    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்...  ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share