வலதுசாரி ஆதரவாளரும் பிரபல யூடியூபருமான மாரிதாஸ் மதுரையில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக முதலமைச்சர் விஜய் தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகளை மாரிதாஸ் முன்வைத்து வந்தார். தற்போது கைதாகி உள்ளார். Youtuber மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுகவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்… Wait a minute… ஆட்சி மாறி விட்டதோ? ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்? என்று கேட்டுள்ளது.

பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க… What bro… It’s very wrong bro..! என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார் என்றும் மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார் எனவும் தெரிவித்தார்.
ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே? என்று ஆதவ் அர்ஜுனாவிற்கு சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது.
ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் உடனடியாக மாரிதாஸ் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!