கும்மிடிப்பூண்டி அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து +1 மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் சின்ன, சின்ன காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியூட்டி வருகின்றன. தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், தந்தை திட்டியனால், அம்மா போன் வாங்க விடவில்லை என்றும், விசா கிடைக்கவில்லை என்றும், சமூக ஊடகங்களில் அவர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு லைக்குகள் வரவில்லை போன்ற சின்ன, சின்ன சம்பவங்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு நொடியில் அவசரப்பட்டு, கொஞ்சம் கூட யோசிக்காமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த தோக்கமூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் (17) ஆரம்பாக்கம் அரசு பள்ளியில் +1 படித்து வந்தார். சரிவர படிக்காததாலும், நண்பர்களுடனான பழக்க வழக்கம் சரி இல்லாததாலும் பெற்றோர் இவரை தொடர்ந்து கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று பள்ளி முடித்து புறப்பட்ட பூவரசன் வீட்டிற்கு செல்லாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து சூலூர்பேட்டை நோக்கி சென்ற புறநகர் ரயிலில் தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: “இதுக்கு மேல என்னால தாங்க முடியாது...” - பெற்றோர் செய்த தவறான செயலால் கல்லூரி மாணவி எடுத்த பகீர் முடிவு...!
இதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் பூவரசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் +1 மாணவன் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே ஷாக்... நீதிமன்ற வாசலிலேயே காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...!