தமிழகத்தில் 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
2009 ஜூன் 1க்குப் பிறகு நியமிக்கப்பட்ட சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் மிகப்பெரிய முரண்பாடு உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும் என்று கோரி கடந்த 16 ஆண்டுகளாக இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 26 முதல் தொடர் போராட்டங்களை அறிவித்த இவர்கள், சென்னையில் முற்றுகை, மனித சங்கிலி, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். தினமும் 900-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பெண்கள், நடிகைகளை வக்கிரமாக சித்தரித்த கயவர்கள்! ஆபாசத்திற்கு துணை போன 'க்ராக்'!! பாய்ந்தது நடவடிக்கை!
அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி 5 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல், தங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் வகுப்புகள் முடங்கியுள்ளன. மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதால் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ், பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச் செயலர் ராபர்ட் இது குறித்து கூறியதாவது: "மாணவர்கள் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காகவே, அரையாண்டு விடுமுறையை தியாகம் செய்து போராட்டத்தை தொடங்கினோம்.
ஆனால் பள்ளி திறக்கும் வரை அரசு எங்களை அழைத்து பேசவில்லை. இப்போது பள்ளிகள் திறந்துவிட்ட நிலையில், மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த போராட்டம் தொடர்பாக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையெனில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியை சீரழித்த காம கொடூரன்கள்!! திமுக நிர்வாகி உட்பட 15 பேர் கைது! திருச்சியில் அதிர்ச்சி!