சென்னை பெரியமேடு சுப்பையா தெரு பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின். இவர் ஏப்ரல் 8ஆம் தேதி தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த வேப்பேரி போலீசார், விசாரணைக்காக வீட்டின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது ஜமாலியா பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்பது தெரியவந்தது. முன்னதாக இவர் மீது ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: ஊருக்குள் உலா வந்த சிறுத்தைகள்.. பீதியில் உறைந்து நிற்கும் கிராம மக்கள்..

இந்த நிலையில் கவியரசனுடன் இணைந்து 17 வயது சிறுவர் ஒருவரும் திருடில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை எடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இருவரும் சுமார் 150-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. குறிப்பாக 17 வயது சிறுவர் மட்டும் இரவு நேரங்களில் தனியாக 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் சிறுவர் சாவி மூலம் எளிதாக திறக்கக்கூடிய டியோ ஸ்கூட்டி வண்டியை குறிவைத்து திருடியது விசாரணையில் அம்பலமானது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவரிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்ட 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தலைமுறைவாக உள்ள கவியரசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மியான்மர் நாட்டை திணற வைக்கும் பூகம்பங்கள்.. மீண்டும் இன்று குலுங்கிய கட்டடங்கள்..!