பொள்ளாச்சியை பகுதியில் பிரபலமான காயர் பித்து கம்பெனி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் அருண்குமார். இவரிடம் 17 வயது சிறுமியின் தந்தை பணியாற்றி வருகிறார்.சிறுமியின் தந்தை அருண்குமாரிடமிருந்து பணம் கடனாக பெற்றிருந்ததாக தெரிகிறது.17 வயது சிறுமியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்து வசித்து வருவதால் சிறுமி அவரது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி தனது தந்தையுடன் காயர் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சிறுமியிடம் அருண்குமார் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏற்படுத்தி, தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமி பலமுறை சிறுமியின் தூரத்து உறவான அத்தை சுகன்யாவிடம் புகார் தெரிவித்ததாக தெரிகிறது.ஆனால் சிறுமியின் அத்தை இதனை பொறுத்துக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் புனிதர் வேடம் தரிப்பதா.? இபிஎஸ்ஸை விளாசி தள்ளிய ஆர்.எஸ். பாரதி!!

இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க சிறுமி பொள்ளாச்சி பகுதியில் உள்ள வேறு ஒரு நிறுவனத்திற்கு தற்காலிக பணிக்குச் சென்றுள்ளார்.அங்கு அவர் மீது எந்த உரிய ஆவணங்களும் இன்றி திருட்டுப்பழி சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமி தற்காலிக பணி செய்யும் இடத்திலிருந்து அந்த கடையின் உரிமையாளர் சிறுமியின் தந்தை வேலை செய்யும் கம்பெனியின் உரிமையாளரான அருண்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டை மில்லில் 17 வயது சிறுமியை அவரது தந்தை அவர் பணி புரியும் உரிமையாளர் முன்பு நிறுத்தி, திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அடித்ததாகவும் கூறப்படுகிறது.பின்பு சிறுமியின் அத்தையான சுகன்யா கீழே இருந்த குச்சியை சிறுமியை தாக்க அருண்குமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது.இந்நிலையில் அருண்குமார் சிறுமியின் கை, கால், தோள்பட்டை, மார்பகங்கள், தொடை, பகுதி, பிட்டம்,
இடுப்பு, முதுகு என உடலின் அனைத்து பகுதிகளிலும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி அதீத வலியால் துடித்துள்ளார்.கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சிறுமி நிற்க சக்தியின்றி தரையில் சுருண்டு சரிந்துள்ளார். தந்தை கண் முன்னே பருவமடைந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தால் சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.மேலும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் அருண்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அருண்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார்
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை தூக்கி வீசுங்கள்.. ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை விந்தியா.!!