வத்தலகுண்டு அருகே ஆடி திருவிழாவிற்கு சாமி கும்பிட சென்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் ரசம் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே எழுவனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் அதே பகுதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழாவில் சாமி கும்பிட குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு அவரது இரண்டு வயது குழந்தை ஸ்ரீதரன் மற்றொரு குழந்தையுடன் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது.
அதே வேளையில் கோவில் அருகே பக்தர்களுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்துள்ளனர். விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் சமையல் செய்யும் பகுதிக்கு சென்று விளையாடிய போது கொதிக்க கொதிக்க அடுப்பிலிருந்து இறக்கி வைத்திருந்த ரசம் பாத்திரத்தில் குழந்தை ஸ்ரீதரன் எதிர்பாராத விதமாக தடுமாறி தவறி விழுந்தான்
தீக்காயங்களுடன் உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை ஸ்ரீதரன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். இதனை அடுத்து தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
இதையும் படிங்க: பார்லி.,-யில் ஒலித்த பாரத் மாதா கீ ஜெய்!! பிரதமர் மோடிக்கு மாலை மரியாதை!! அசத்திய தேஜ கூட்டணி!
இது தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சாமி கும்பிட சென்ற இடத்தில் கொதிக்கும் ரச பாத்திரத்தில் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விடாப்பிடி எதிர்கட்சிகள்... விவாதிக்க மறுக்கும் மத்திய அரசு! களேபரமான மக்களவை.