நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2024-ல் தொடங்கப்பட்டு, 2025-ல் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று வருகிறது. அவரது அரசியல் பிரவேசமும், மக்கள் நலத்திட்டங்களும், கொள்கை அறிவிப்புகளும் தமிழ்நாட்டு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
விஜய்க்கு மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது, குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், மற்றும் ஆளும் கட்சிகளுக்கு மாற்று தேடுபவர்கள் மத்தியில் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, TVK-இன் மாநாடு, உறுப்பினர் சேர்க்கை, மற்றும் மக்கள் நலப் பணிகள் ஆதரவை மேலும் வலுப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு 2026 சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்த வழக்கு... குறுக்கு விசாரணைக்கு ஆஜரான நயினார் நாகேந்திரன்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவோம் என்ற பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார நடை பயணத்தில் ஏராளமான காங்கிரஸ் ஆர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், பாஜக மடியில் அமர்ந்து கொண்டு நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவற்றை எடப்பாடி பழனிச்சாமி எப்படி கூட்டணிக்கு அழைக்கிறார் என்று தெரியவில்லை என தெரிவித்தார். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக தமிழகத்தில் உள்ளதாக தெரிவித்த கார்த்திக் சிதம்பரம், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கணிசமான வாக்குகளை பெறுவார் என்றும் விஜய்க்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாகவும், ஆனால் அந்த வாக்கு வகைகள் வெற்றி பெரும் அளவுக்கு கிடைக்குமா என்பதை தன்னால் கணித்து சொல்ல முடியாது என தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் பலமே இரட்டை இலை தான் என்றும் காமராஜர் குறித்த சர்ச்சை தற்போது தேவையற்றது என கூறினார். முதலமைச்சர், திருச்சி சிவா உள்ளிட்டோர் அந்த விமர்சனம் தொடர்பாக போதிய விளக்கம் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை! காமுகனை பிடிப்பதில் என்ன அலட்சியம்? தவெக முற்றுகை போராட்டம்