தமிழகத்தில் கனமழையால் சேதமடைந்த பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், கணக்கீடு முழுமையாக முடிந்ததும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீடித்து வரும் கனமழை மற்றும் 'டிட்வா' புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கனமழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறையில் ஒருவர், திண்டிவனத்தில் ஒருவர், தூத்துக்குடியில் ஒருவர் மற்றும் தஞ்சாவூரில் ஒருவர் என நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மழை பாதித்த பகுதிகளில் 54 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 1,327 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,524 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 11 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF) மற்றும் 10 மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள் (TNRF) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 330 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ₹20,000 இழப்பீடு வழங்கப்படும் என்று நேற்று முதலமைச்சர் உத்தரவிட்டார். இப்போது பெய்த மழையால் சுமார் 85,500 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
நீர் வடிந்த பின்னரே பயிர் சேதத்தின் சரியான அளவீட்டைக் கணக்கெடுக்க முடியும். கணக்கீடு முழுமையாக முடிந்தவுடன், முதலமைச்சரின் உத்தரவின்படி உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். வனப்பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்குமாறு மனிதவளத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஒரு சில இடங்களில் அதிகாலை 4 மணி நிலவரப்படி 582 மி.மீ மழையும், மாலை 4 மணி நிலவரப்படி 1,601 மி.மீ மழையும் பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடரும் கனமழை!
இப்போது பெய்த மழையின் சேதம், கடந்த 10 ஆண்டுகளில் இ.பி.எஸ். மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பை விட குறைவு என்றும், சென்னையில் வெள்ள நீர் வடிந்துவிட்டதாகவும், மற்ற மாவட்டங்களில் அதிகச் சேதம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைகள் குறித்து அவர்களுக்குத் தெளிவான பார்வை இல்லை. இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறுகிறார்கள். தமிழக அரசால் என்ன செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம். அங்கும் இங்கும் செய்யச் சொல்வது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதல்ல.
பயிர்சேத விவரங்களை உடனடியாகக் கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் தொடர்ச்சியாகப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய மழையில் சுமார் 85,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். கணக்கெடுப்பு முடிந்த பின்னரே இறுதி இழப்பீடு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மட்டும் 11 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF) தயார் நிலையில் உள்ளதாகவும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை வாக்காளர் நீக்கம்: SIR திருத்தப் பணியால் 10 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு.. மாவட்ட நிர்வாகம் தகவல்!