மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள மாவிலிபட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகள் ராஜராஜேஸ்வரி என்ற 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவி இன்று பள்ளிக்கு செல்லும் போது செலவுக்காக தாய் காளிஸ்வரியிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார்.
தாய் 20 ரூபாய் தராத நிலையில் மன விரக்தியில் வீட்டில் தூக்கிட்டு பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் மாணவி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீங்க ஆளுநரா இல்ல பாஜக தலைவரா? பதில் சொல்லுங்க சார்! கனிமொழி காட்டம்..!
சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. செல்போன் தரவில்லை, பரீட்சையில் தோல்வி, நீட் தேர்வு பயம், பெற்றோர் திட்டியது போன்ற சின்ன, சின்ன காரணங்களுக்காக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது.
பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கவும், விழிப்புணர்வுக்காகவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள உதவி மையத்தின் 14417 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர் நலனுக்காக தான் 14417 உதவி மையம் இருக்கிறது என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டு, தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எந்த தயக்கமும் இன்றி உதவி மையத்தை அழைத்து ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்.
இதையும் படிங்க: டெல்லியில் ரூ.5க்கு உணவு.. 'அடல் கேண்டீன்' திட்டத்தை அறிவித்தார் முதல்வர் ரேகா குப்தா..!!