தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலை அளிப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்திருந்தார். பாலியல் வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் போதைப் பொருள் விநியோகம் தமிழகத்தின் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியோடு தான் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். கஞ்சா உள்பட ரசாயன போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்தவாறு உள்ளது என்றும் கூறினார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் பேச்சுக்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என்று கூறினார். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “அவமானமா இல்ல, அமித்ஷாவே சிரிப்பா சிரிப்பாரு” - ஆளுநர் ஆர்.என்.ரவியை பங்கமாய் கலாய்த்த கே.என்.நேரு...!
இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு என்று கேள்வி எழுப்பினார். அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா இல்லை பாஜக தலைவராகவா என்றும் விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே, தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களை ஆளுநர் ரவி செய்வதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக அவர் கூறிய குற்றச்சாட்டு பேசப் பொருளாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: அடேங்கப்பா…கேஸ் போட்ட தேன்மொழி யாருன்னு தெரியுமா? பகீர் கிளப்பிய அதிமுக!