தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இன்று காலை 5:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலின் ஒரு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில நேற்றைய தினம் வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. அது இன்று காலை 5:30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய மையத்தின் சார்பில் தகவல் என்பது வெளியிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: உஷாரய்யா.. உஷாரு... காலையிலேயே 17 மாவட்டங்களுக்கு வெளியானது முக்கிய எச்சரிக்கை...!
இதன் காரணமாக வரும் நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரண்டு ஆபத்து... இன்று முதல் வெளியானது முக்கிய எச்சரிக்கை... தாக்கு பிடிக்குமா தமிழகம்?