புழல் ஏரி, செங்குன்ற ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இது சென்னையின் முக்கிய குடிநீர் ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி 1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. புழல் ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 4,500 ஏக்கர் ஆகும், மேலும் இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. புழல் ஏரி மழைநீரைப் பிடித்து சேமிப்பதோடு, பூண்டி ஏரி மற்றும் சோழவரம் ஏரியிலிருந்து கால்வாய்கள் மூலம் வரும் நீரையும் சேமிக்கிறது.
குறிப்பாக, பூண்டி ஏரியிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் இதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர சென்னையின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான நீர் ஆதாரங்களில் ஒன்றாகப் புழல் ஏரி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையின் வடக்கு எல்லையில் அமைந்த இந்த ஏரி, மழைநீர் சேமிப்பு மற்றும் குடிநீர் விநியோகத்திற்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்றது.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. ஏரிகளில் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருவதால் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “திறக்கப்போறோம்... 2 மணிக்கு அலர்ட்டா இருங்க..” 18 கிராமங்களுக்கு பறந்த எச்சரிக்கை...!
குறிப்பாக கனமழை எதிரொளியாக புழல் ஏரி நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…! அப்போ சென்னைக்கு?