இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது சகாக்களால் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி. 2011 ஆம் ஆண்டு இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் விளைவாக உருவான இந்தக் கட்சி, ஜன் லோக்பால் மசோதாவை கோரிய அண்ணா ஹசாரேவின் இயக்கத்திலிருந்து தோன்றியது.
ஊழலை ஒழிப்பது மற்றும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை இலவசமாகவோ அல்லது மலிவு விலையிலோ வழங்குதல்., மக்களை முடிவெடுக்கும் செயல்முறையில் ஈடுபடுத்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், பெண்கள், முதியோர், மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவித்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.

2023 ஏப்ரல் 10 அன்று, இந்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கியது. இது கட்சியின் வேகமான வளர்ச்சி மற்றும் தேசிய அளவிலான செல்வாக்கை உறுதிப்படுத்தியது. தற்போது கூட்டணி முறிவு தொடர்பாக ஆம் ஆத்மி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, 2025 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்தே களம் கண்டது.
2025 ஆம் ஆண்டு தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் போட்டியிட்டு 22 இடங்களை மட்டுமே வென்றது. இதன் மூலம், பாஜக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. நாளை இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: டிஎஸ்பி சுந்தரேசன் இப்படிப்பட்டவரா? - வெளியானது பகீர் குற்றச்சாட்டு...!
இதையும் படிங்க: பாகிஸ்தானை புரட்டிப்போடும் கனமழை.. 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழப்பு..!