சென்னை குன்றத்தூரில் 2018 ஆம் ஆண்டு தகாத உறவின் காரணமாக தனது இரண்டு குழந்தைகளை அபிராமி என்ற பெண் கொடூரமாக கொலை செய்தார். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த அபிராமி (வயது 30). அவரது கணவர் விஜய், தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அஜய் மற்றும் கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.
அபிராமிக்கு, அவரது பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பணியாற்றிய சுந்தரம் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இந்த உறவு, அபிராமியின் கணவர் விஜய்க்கு தெரியவந்ததால், குடும்பத்தில் பெரும் பிரச்சினைகள் எழுந்தன.
இதையும் படிங்க: நாங்க என்ன எதிரியா? போலி பிம்பத்தை கட்டமைக்குறாங்க! ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்…
2018 ஆகஸ்ட் 31 அன்று, விஜய் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், அபிராமி தனது குழந்தைகளான அஜய் மற்றும் கார்னிகாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். குழந்தைகள் தூங்கிய பிறகு, அவர் அவர்களது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்தாலும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இருவருக்கும் கொடுக்கப்படும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அபிராமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அபிராமியுடன் தகாத உறவில் இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தனது மனுவில் அபிராமி கூறி உள்ளார். அபிராமி தாக்கல் செய்த மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: தோனியிடம் வாக்குமூலம் வாங்குங்க... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!