குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. 7 கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், 12வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று அவசர முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: களத்தில் சீமான்… போராடிவரும் தூய்மை பணியாளர்களுக்கு நேரில் சென்று ஆதரவு
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி வழக்கறிஞர் வினோஜ் என்பவர் முறையீடு செய்தார். மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரவு தெரிவித்தது.

அப்போது சேப்பாக்கம் மற்றும் எழும்பூர் ராஜரத்தின மைதானம் ஆகி போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் வழக்கறிஞர் வினோத் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி உள்ளார்.
அப்போது, அரசு தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போல போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு தங்கள் ஆதரவாகவே செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எவ்வளவு ஆணவம் இருக்கும்? முடிஞ்சா ARREST பண்ணுங்க! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்..