சென்னை ஊரப்பாக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் உடன் தங்கியிருந்த நண்பன் கொலை செய்யப்பட்டுள்ளார். சேலத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை சரவணன் என்ற கார் ஓட்டுநர் கொலை செய்ததாக தெரிகிறது.

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக வினோத்தை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வினோத்தின் உடலை மறைமலைநகர் அருகே உள்ள குவாரியில் போட்டுவிட்டு போலீசில் சரணடைய சரவணன் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஈரோடு இரட்டை கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிகளை தட்டி தூக்கிய போலீஸ்..!

இதன் காரணமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையத்தில் சரவணன் சரணடையச் சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது இது எங்கள் லிமிட் இல்லை என திருவல்லிக்கேணி போலீசார் கூறிவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்து சென்ற சரவணன், மறைமலைநகர் காவல் நிலையத்தில் சரணடைச் சென்றுள்ளார். அங்கும் அவர் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய லிமிட்டில்தான் வரும் எனக் கூறி அங்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சரவணன் கொடுத்த தகவலை வைத்து வினோத்தின் சடலத்தை குவாரியிலிருந்து போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சரணடையச் சென்ற கொலைகாரனை போலீசார் சமயோஜிதமாக யோசித்து நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்து வேறு இடத்திற்கு சென்று சரணடைய கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு இரட்டைக் கொலை குற்றவாளிகளே பல்லடம் மூவர் கொலைக்கும் காரணம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!